இரேணாட்டுச் சோழர் (தெலுங்கு சோழர்கள்)

 இரேணாட்டுச் சோழர்

  • இரேணாட்டுச் தெலுங்கு சோழர்கள் இரேணாட்டுச் பிராந்தியத்தை (இன்றைய கடப்பா மாவட்டம்ஆட்சிசெய்தனர்.
  • இந்தக் குடும்பத்தின் மூத்த மன்னர் நந்திவர்மன் ஆவார் (கி.பி 500).
  • இந்த மன்னர்கள் தாங்கள் கரிகால சோழர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்டனர்.


  • சமஸ்கிருதத்திற்குப் பதிலாக நிர்வாகத்திலும் கல்வெட்டுகளிலும் தெலுங்கைப் பயன்படுத்திய முதல் ஆட்சிஇவர்களது ஆட்சி என்று கூறப்படுகிறது.

  • தமிழராகிய இந்தச் சோழர்கள் தெலுங்கு நாட்டையரசாண்டபடியால்நாட்டு மொழியாகிய தெலுங்குமொழியைத் தங்களுடைய அரசாங்க மொழியை அமைத்துக்கொண்டனர்தெலுங்கிலேயே கல்வெட்டுச்சாசனங்களையும் செப்பேட்டுச் சாசனங்களையும் எழுதினார்கள்பிற்காலத்தில் அவர்கள் தெலுங்கராகவேமாறிவிட்டார்கள்.
  • சீன தேசத்திலிருந்து பாரத தேசத்துக்கு வந்த பல நாடுகளைச் சுற்றி பார்த்த “யுவான் சுவாங்” என்னும் பௌத்தயாத்திரைக் குறிப்பில் இரேணாட்டை “சுலிய” என்று எழுதியுள்ளார்சுலிய என்பது சோழிய அல்லது சோழஎன்னும் சொல்லின் திரிபு
  • யுவான் சுவான் கி.பி 639 640 ஆம் ஆண்டில் இவர் அமராவதியாலும்காஞ்சிபுரத்திலும் தங்கியிருக்கிறார்அமராவதிகாஞ்சிபுரத்துக்கு இடை வழியில் “சுலிய” (சோழநாடு இருந்தது என்று இவர் தம்முடைய யாத்திரைக்குறிப்பில் எழுதியாள்ளார்.
  • கடப்பை மாவட்டம் ஜம்மலமடுகு தாலுக்காவில் பெத்த முடியம் என்னும் ஊரில் சிதைந்து போன கல் எழுத்துச்சாசனம் காணப்படுகிறதுஇந்தச் சாசனத்தில் சோழ மகாராசன் என்னும் பெயர் காணப்படுகிறதுசாசனக்கல்லின் மேற்புறத்தில் புலியின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறதுஇந்தப் புலி வாயைத் திறந்து கொண்டு(உறுமிக் கொண்டுநிற்பதுபோலக் காணப்படுகிறது (351 of 1905). இந்த மாவட்டத்தில் சமயபுரம் தாலுகாவில் சிலம்கூர் என்னும் ஊரில் ஒரு வயலில் உடைந்து கிடக்கிற கற்றூணில் தெலுங்கு எழுத்துச் சாசனங்கள் காணப்படுகின்றனஇதில் சோளமஹாதேவுலு (சோழ மகாதேவர்என்னும் பெயர் காணப்படுகிறது (396 of 1904). இவ்வூர் அகத்தீஸ்வரர் கோவிலின் முன்புறத்தில் விழுந்து கிடக்கிற கற்றூணில் மூன்று பக்கங்களில் தெலுங்கு எழுத்துச் சாசனம் எழுதப்பட்டுள்ளதுஇச் சாசனத்தில் விக்கிரமாதித்திய சோள மஹாராஜூலு எளஞ்சோள மஹா தேவி (இளஞ்சோழ மகாதேவிஎன்னும் சோழ அரச அரசியரின் பெயர்கள் காணப்படுகின்றன(400 of 1904). கலமள்ள என்னும் ஊரில் உள்ள சென்னகேசவ கோவிலின் முற்றத்தில் உடைந்து கிடக்கிறகற்றூணில் இரண்டு பக்கங்களில் தெலுங்கு எழுத்துச் சாசனம் காணப் படுகிறதுஇதில் இரேணாட்டு அரசன் தனஞ்சயேண்டு என்பவன் பெயர் காணப்படுகிறது (380 of 1904).
நன்றி:- “களப்பிர்ர் ஆட்சியில் தமிழகம்” - மயிலை சீனி வேங்கடசாமி


No comments:

Post a Comment