ஆய்வுகள் :
புத்த சமயத்தைச் சேர்ந்த புனிதப்பயணி யுவான் சுவாங்கின் குறிப்புகளை ஆராய்ந்தார். இவர் பல புத்தகங்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் பாருத் என்ற இடத்தில் இருந்த புத்த ஸ்தூபத்தை (புத்த சமயவழிபாட்டுச் சின்னம்) கண்டுபிடித்து, அதைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுத்தார். இவர் பாரூத்தில் சேகரித்த சிற்பங்களை கொல்கத்தாவில் உள்ள அருங்காட்சியத்தில் வைத்துப் பாதுகாக்க ஏற்பாடு செய்தார்.
இவர் அசோகருடைய தூண்கள், மற்றும் பிற அசோகர் காலச் சான்றுகள், குப்தர் கால மற்றும் அதற்குப் பிந்தையகாலத் தொல்லியல் சான்றுகளைக் கண்டுபிடித்தார். பழங்கால நகரங்களான சங்கிஸா, சிராவஸ்தி, மற்றும் கோசாம்பி ஆகிய இடங்களை அடையாளப்படுத்தினார். இவர் சாரநாத், சாஞ்சி மற்றும் புத்த கயை ஆகிய இடங்களில் அகழாய்வுசெய்தார். மேலும் திகவா, பில்சார், நாச்னா குத்தரா மற்றும் தேவகர் ஆகிய இடங்களில் உள்ள குப்தர் காலத்தொல்லியல் சின்னங்களையும் மற்றும் ஏரன், உதயகிரி ஆகிய ஊர்களில் உள்ள கல்வெட்டுகளையும் ஆராய்ந்தார்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment