நீர் எழுத்து

நீர் எழுத்து



“நீர் எழுத்து” புத்தகத்தில் தமிழகத்தின் தண்ணீர் வரலாற்றை ‘சங்க காலம் தொடங்கி சமகாலம் வரைக்குமான தமிழ்நாட்டின் ஈராயிரம் ஆண்டுகால நீர் வரலாற்றை பதிவு செய்யும் முயற்சி' என்று சரியாகவே முன்னுரையில் குறிப்பிடுகிறார் நூலாசிரியர் நக்கீரன்.


தமிழ்ப் பண்பாடு என்பதே , நீர் பண்பாடுதான்.

“இனிமையும், நீர்மையும் தமிழ் எனல் ஆகும்” என்கிறது பிங்கல நிகண்டு.


நமது நீர்! நமது உரிமை! The human right to water and sanitation.


👉 சத்தீஸ்கர் மாநிலத்தின் ஓடும் ஓர் ஆற்றின் பெயர் “சியோநாத்” (Sheonath). 365 km நீளமுள்ள இந்த ஆற்றில் 23.6 km நீளமுள்ள ஒரு பகுதியை “ரேடியஸ் வாட்டர்” என்கிற தனியார் நிறுவனத்துக்கு 22 ஆண்டுகள் குத்தகைக்கு வழக்கப்பட்டது. இந்த ஒப்பந்ததைப் பற்றி அப்பகுதி மக்களுக்கு எதுவும் தெரியாது. ரேடியஸ் நிறுவனம் அங்கிருந்த 16 ஊர்களுக்கும் ஆற்றில் மீன் பிடிக்கத் தடை விதித்தது. பின்னர் விவசாய பாசன நீருக்கும் தடை விதிக்கப் பட்டது. மக்கள் வேறு வழியின்றி கிணத்து நீரைக் கொண்டு பாசனம் செய்ய முற்பட போது அதற்கும் தடை விதித்தது அந்நிறுவனம். 


“கிணறு வேண்டுமானால் உங்களுடையதாக இருக்காலம் ஆனால் அதில் ஊறும் நீர் எங்களுடையது” என்று பதில் சொன்னது அந்நிறுவனம் 😡


👉 திருப்பூரில் பெக்டெல் (Bechtel) மற்றும் கோவையில் சூயஸ் (Suez):- ஆசியாவிலேயே , நீர் தனியார் மயமாக்கப்பட்ட முதல் மாநகராட்சி திருப்பூர்.   இந்த பெக்டெல் நிறுவனம் பொலிவியாவில் என்ன செய்தது என்பது இங்கு யாருக்காவது தெரியுமா?!

தென்னாப்பிரிக்காவின் Johannesburg குடிநீர் பணத்துக்கு வழக்கிய நிறுவனம் தான் Jovam. இந்த நிறுவனம் தற்பொது Suez என்ற பெயரில் கோவை நகருக்குள் நுழைந்திருக்கிறது.


https://www.shareable.net/how-a-water-war-in-bolivia-led-to-the-reversal-of-privatization/


👉 தேசிய நீர்க் கொள்கை:-

நீர்த் துறையில் சேவையை அளிப்பவர் என்ற பொறுப்பிலிருந்து அரசு விலக வேண்டும் என்பதே இந்த கொள்கை. 

அதாவது நீர்ச் சேவையானது இனி தனியார் வசம் இருக்கும். அரசே தனியாரிடமிகுந்து நீரை விலைக்கொடுத்து வாங்க வேண்டும். இந்த நீரை அரசு மக்களுக்கு காசுக்கு விற்குமோ அல்லது இலவசமாக அளிக்குமோ அது அரசின் தலைவலி.

இந்த புதிய நீர்க் கொள்கையை ஸ்மார்ட்சிட்டி என்கிற பெயரில் பகுதிவாரியாக தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கிறது பாசிச மோடி அரசு. 😡


👉 பிரம்மதேயமும் நீர் உரிமையும்:-

கிராம சபை என்பது பார்ப்பனக் குடிகளால் நிர்வகிக்கப்பட்டது. ஊர் அவை என்பது பெரும்பாலும் வேளாளர்களைக் கொண்டதாக இருந்தது. காசாக்குடிக் செப்பேடுகள் (கி.பி. 752), புல்லூர்ச் செப்பேடுகள் (கி.பி. 769) ஆகியவை நிலமும் நீரும் முன்பெற்றாரை மாற்றி பார்பனர்களுக்கு கொடுத்தது. 

இவ்வாறு வழங்கப்பட்ட நீர் உரிமைகளின் தன்மை கவனத்துக்குரியது. ஆற்றிலிருந்தும் ஏரிகளிலிருந்தும் வாய்க்கால்களைத் தோண்டிக் கொள்ளலாம். அதன் அகலத்தையும் அவர்களே முடிவுச் செய்யலாம். இவற்றில் பிறர் நீர் இறைக்கவோ கிளை வாய்க்கால்களை உருவாக்கவோ முடியாது. மீறுவோர் அரசரால் நேரடியாகத் தண்டிக்கப்படுவர். சத்தீஸ்கரின் சியோநாத் ஆறு ரேடியஸ் வாட்டர் நிறுவனத்துக்கு வழக்கப்பட்ட கதை அன்றே நிகழ்ந்துள்ளது.



👉 ஹார்மன் கோட்பாடு:-

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) ஹார்மன் என்பவர் ஆற்று நீர் பகிர்வில், ஆட்சி ‘எல்லை இறையாண்மை’  என்ற கோட்பாட்டை முன்வைத்தார். 

ஒரு நாடு தனது எல்லையில் ஓடும் ஆற்றை அதன் விருப்பத்திற்கேற்ப எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தும் இறையாண்மை பெற்றிருக்கிறது என்ற கருத்தை முன்வைத்தார். பாசனம் பெறும் மற்ற நாடுகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் கூறினார்


கர்நாடகம் கடைப்பிடிக்கும் ஹார்மன் கோட்பாடு. ஒரு சொட்டு தண்ணீர்கூட தமிழ்நாட்டுக்குத் தர முடியாது என்று மூர்க்கத்தனமாக சொல்கிறது


👉 ஹெல்சிங்கி கோட்பாடு (Helsenki Rules):-

பின்லாந்து நாட்டின் ஹெல்சிங்கி நகரில் 1966ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  ஐக்கிய நாடுகள் சபை  சட்ட வல்லுநர்களை அழைத்து நதி நீர் பங்கீடு குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தியது. அதில் ஆற்று நீர் பிரச்னைகளை தீர்க்க உலக நாடுகள் ஆறுகள் பாயும் எல்லாப் பகுதிகளுக்கும்(நாடுகள், மாநிலங்கள்) அதன் மீது உரிமை உண்டு,  (பழங்கால) பழக்க வழக்கங்கள், ஒப்பந்தங்கள், உரிமைகள் அடிப்படையில் பங்கீடு பிரச்னையில் தீர்வு காண வேண்டும்,  உண்மையான விவரங்கள் அடிப்படையில் பிரச்னைகளை தீர்க்க வேண்டும், வடிநிலப்பகுதிகளில் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள் என எல்லா நீர் நிலைகளையும் ஒன்றாக இணைத்து கணக்கீடு செய்ய வேண்டும், ஒரு நாட்டின் ஆற்று நீர் உரிமையில் மற்ற நாடுகள் குறுக்கீடு செய்யக் கூடாது ’ என்பது உட்பட பல்வேறு கோட்பாடுகளை பரிந்துரை செய்தது.  உலக நாடுகள் ஹெல்சிங்கி கோட்பாடுகளை கடைப்பிடித்து ஆற்று நீர் பங்கீடு பிரச்னைகள் தீர்த்துக் கொள்கின்றன.


எழுத்தாளர் நக்கீரன் அவர்களின் இதர புத்தகங்கள்

👉 “கண்ணுக்குத் தெரியாமல் களவுபோகும் நீர்”

👉 “உயிரைக் குடிக்கும் புட்டிநீர்”

👉 “அலையாத்திக் காடுகளும் அனல்மின் நிலையங்களும்”

👉 “காடோடி” நாவலில் போர்னியோ காடுகளின் அழிவைப் பதிவு செய்தார். 

👉 “சூழலும் சாதியும்”


Other author books


👉 உலகமயமாக்கல்: அடிமைத்தளையில் இந்தியா - அரவிந்த்

https://www.commonfolks.in/books/d/ulagamayamaakkal-adimaithalaiyil-india


👉 பொருட்களின் கதை - ஆனி லியோனார்டு

https://www.commonfolks.in/books/d/porutkalin-kathai


👉 ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

Author: ஜான் பெர்க்கின்ஸ்

Translator: இரா. முருகவேள்

https://www.commonfolks.in/books/d/oru-porulaathaara-adiyaalin-opputhal-vaakkumoolam


👉 தமிழக பாசன வரலாறு - முனைவர்.பழ. கோமதிநாயகம்


👉 தாமிரவருணி சமூக - பொருளியல் மாற்றங்கள் முனைவர்.பழ. கோமதிநாயகம்


👉 தமிழக வரலாற்றில் நீர் உரிமை - ஆசிரியர்: க.இரா. சங்கதன்


                    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

மாயையும் எதார்த்தமும் - டி. டி. கோசாம்பி

மாயையும் எதார்த்தமும்

டி. டி. கோசாம்பி


யதார்த்தத்தைக் காண்பதை விட தேசபக்தியை பெரிதாக காணும் இந்திய விமர்சகர்களுக்கு சுயமரியாதை சிந்நனைகள் எரிச்சலையூட்டும். மென்மையான அல்லி மலர் போன்ற அழகிய இந்திய தத்திவத்தை ரசிப்பதைவிட, வெறும் மூட நம்பிக்கை என்ற சகதியில் ஏன் விழ வேண்டும்.


மரபுகள் ஒன்றோடொன்று தாங்களாகவே மோதிக்கொள்வதில்லை. அம்மரபுகளை பின்பற்றும் மக்களால்தான் ஒரு உடன்பாட்டிற்கு வர முடியவில்லை.




மொகஞ்சதாரோ முத்திரையில் காணப்படும் மூன்று தலைகளுள்ள கடவுள், தற்கால சிவனாக உருவெடுத்திருக்கலாம். 


சிந்துவெளி முத்திரைகளில் கணப்படும் மனிதன்-புலி உருவம்.



பார்வதியின் குழந்தை கணேசன் சிவனின் குழந்தையல்ல. அக்குழந்தையின் தலையை சிவன் கொய்து, அ்ங்கு யானையின் தலையை வைத்ததாக கதை. மற்றொரு குழந்தையாகிய ஸகந்தன், சிவனுடைய விந்துக்கும் பிறந்தவன் ஆனால் பார்வதியின் கருப்மையில் வளரவில்லை. சிவனை ஒரு உயர்ந்த கடவுளாக உயர்த்துவதன் மூலம் இப்படிப்பட்ட முட்டாள் தனமான கதைகளுக்கு விளக்கம் காணமுடியாது.


பகவத் கீதை:-

மகாபாரதப் போர் உண்மையிலேயே கூறப்பட்ட முறையில் நிகழ்ந்திருந்தால், டில்லி - தானேசுவரம் ஆகிய இரு நகரங்களுக்கிடையே நடைபெற்ற பதினெட்டு நாள் போரில், சுமார் ஐம்பது லட்சம் பேர் ஒருவரையொருவர் கொன்றிருப்பார்கள். அப்போரில் ஒரு லட்சத்து முப்பதாயிரம் தேர்களும், அதே எண்ணிக்கையிலான யானைகளும், ஏறக்குறைய அது போல மூன்று மடங்கு குதிரை வீர்ர்களும் பங்கு கொண்டிருந்திருக்க வேண்டும். இது மொத்த மக்கட்தொகை குறைந்தது இருபது கோடியாவது இல்லாமலிருந்தால், இவ்வளவு பெரிய படையை பெற்றுருக்க முடியாது. பிரிட்டிஷார் ஆண்ட காலம் வரும் வரையில் இவ்வளவு பெரிய மக்கள்தொகை இந்தியாவில் இருந்ததில்லை. 


கீதையில் கூறுவது போல இரு படைகளும் மோதுவதற்கு தயாராகிவிட்ட நிலையில் தார்மீக தத்துவம் பற்றி சுமார் மூன்று மணி நேர உபதேசம் சாத்தியமா என்பதே.


மாற்றம்:-

கொள்கைகள் காலத்தைக் கடந்தவையல்ல. சமுதாயத் தேவைகளை பூர்த்தி செய்யவே சில நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. கீதையி்ல் “நான்கு வர்ணங்களும் என்னால் படைக்கப்பட்டவையே” (கீ 4-13). கர்மம் பற்றிய கோட்பாடு புத்த மதத்தின் கொள்கையாகும். புத்த மதம் இல்லையெனில் கீதை 2ஆம் அத்தியாயத்தில் 55 முதல் 72 வரை பாடல்கள் இருந்திருக்கவே முடியாது. இப்பாடல்களை காந்தி தனது ஆசிரம பிராத்தனைக் கூட்டத்தில் தினமும் பாடச் சொல்வார். 


கிருஷ்ணன்:-

நாராயனனுடன் கிருஷ்ணனை இணைத்து பேசுவது ஓரு செயற்கையானதே.  ஏதாவது ஒரு வகையில் கிருஷ்ணனை வழிபடும் பழக்கம் இருந்திருக்க வேண்டும் பின்னர் பிராம்மணர்கள் ஈர்க்கப்பட்டனர். வேதங்களில் ஒரு விஷ்ணு இருக்கிறார் ஆனால் நாராயணர் இல்லை. நாராயணன் என்றால் ஓடும் நிரில் உறங்குபவன் ( நாரா) எனப்பொருள்படும். மெச்டோமியாலைச் சேர்ந்தயா அல்லது எங்க்கி என்பவரும் நீருக்கு மத்தியில் ஒரு அறையில் உறங்குவது போல் காணப்படுகிறார் 



இது சுமேரிய முத்திரைகளில் பொறிக்கப்பட்டுள்ளதை காண முடியும். நாரா என்ற சொல் சிந்து வெளி நாகரிக காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம். 


வேதத்தில் இந்திரனே முழுமுதற் கடவுள். அவன் கொடுங்கோலனான ஒரு ஆரிய போர் வீரன். அவனுடைய புகழ் புத்த மதம் வந்த பிறகு அழிக்கப்பட்டது.  யாகம் செய்வதைக் புத்த மதம் முற்றிலுமாக நிராகரித்தே காரணம். 


ரிக் வேதத்தில் காணப்படும் இந்திர எதிர்ப்பு ஆரியர்களுக்கு முந்தைய கருப்பு மக்களுக்கும் படையடுத்து வந்த ஆரியர்களுக்கும் மிடையேயான போராட்டங்களை பிரதிபலிக்கிறது. 


தொடரும்….





காளமேகப்புலவர் - வித்தாரச்செய்யுள்

“ காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக் காக்கைக்குக் கைக்கைக்கா கா “

         காளமேகப்புலவர்


புலியூர்க் கேசிகன் உரை

செய்யுள் அமைதியுடன் வித்தாரமாகப் பாடியவை வித்தாரச்செய்யுட்கள் ஆகும். நுட்பமாகப் பொருளைக்கண்டு உணர்தல் வேண்டும்.

“ககர வருக்கமே முற்றிலும் அமைந்து வருமாறு ஒரு செய்யுளைச் செய்க” எனக் கேட்டவர் வியக்குமாறு சொல்லியது இது.


  • காக்கைக்கு ஆகா கூகை – காக்கைக்கு கூகையை இரவில் வெல்லுதற்கு ஆகாது.
  • கூகைக்கு ஆகா காக்கை – கூகைக்கு காக்கையை பகலில் வெல்லுதற்கு ஆகாது. அதனால்,
  • கோக்கு கூ காக்கைக்கு – அரசனுக்காக அவன் நாட்டைப் பகைவரிடமிருந்து காப்பற்றுகைக்கும்
  • கொக்கு ஒக்க – கொக்கைக் போலத் தகுதியான சமயம் வரும்வரை காத்திருக்க வேண்டும்.
  • கைக்கைக்கு – பகையை எதிர்த்து
  • காக்கைக்கு – காப்பாற்றுவதற்கு
  • கைக்கு ஐக்கு ஆகா – சாமர்த்தியமான தலைவனுக்கும் இயலாதாகிப் போய்விடும்.




காக்கைக்கு கூகையை (ஆந்தை) இரவில் வெல்லுதற்கு ஆகாது. கூகைக்கு காக்கையை பகலில் வெல்லுதற்கு ஆகாது. அதனால், அரசனுக்காக அவன் நாட்டைப் பகைவரிடமிருந்து காப்பற்றுகைக்கும் கொக்கைக் போலத் தகுதியான சமயம் வரும்வரை காத்திருக்க வேண்டும். பகையை எதிர்த்து காப்பாற்றுவதற்கு சாமர்த்தியமான தலைவனுக்கும் இயலாதாகிப் போய்விடும்.


                       🙏🙏🙏🙏🙏🙏🙏