காளமேகப்புலவர் - வித்தாரச்செய்யுள்

“ காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக் காக்கைக்குக் கைக்கைக்கா கா “

         காளமேகப்புலவர்


புலியூர்க் கேசிகன் உரை

செய்யுள் அமைதியுடன் வித்தாரமாகப் பாடியவை வித்தாரச்செய்யுட்கள் ஆகும். நுட்பமாகப் பொருளைக்கண்டு உணர்தல் வேண்டும்.

“ககர வருக்கமே முற்றிலும் அமைந்து வருமாறு ஒரு செய்யுளைச் செய்க” எனக் கேட்டவர் வியக்குமாறு சொல்லியது இது.


  • காக்கைக்கு ஆகா கூகை – காக்கைக்கு கூகையை இரவில் வெல்லுதற்கு ஆகாது.
  • கூகைக்கு ஆகா காக்கை – கூகைக்கு காக்கையை பகலில் வெல்லுதற்கு ஆகாது. அதனால்,
  • கோக்கு கூ காக்கைக்கு – அரசனுக்காக அவன் நாட்டைப் பகைவரிடமிருந்து காப்பற்றுகைக்கும்
  • கொக்கு ஒக்க – கொக்கைக் போலத் தகுதியான சமயம் வரும்வரை காத்திருக்க வேண்டும்.
  • கைக்கைக்கு – பகையை எதிர்த்து
  • காக்கைக்கு – காப்பாற்றுவதற்கு
  • கைக்கு ஐக்கு ஆகா – சாமர்த்தியமான தலைவனுக்கும் இயலாதாகிப் போய்விடும்.




காக்கைக்கு கூகையை (ஆந்தை) இரவில் வெல்லுதற்கு ஆகாது. கூகைக்கு காக்கையை பகலில் வெல்லுதற்கு ஆகாது. அதனால், அரசனுக்காக அவன் நாட்டைப் பகைவரிடமிருந்து காப்பற்றுகைக்கும் கொக்கைக் போலத் தகுதியான சமயம் வரும்வரை காத்திருக்க வேண்டும். பகையை எதிர்த்து காப்பாற்றுவதற்கு சாமர்த்தியமான தலைவனுக்கும் இயலாதாகிப் போய்விடும்.


                       🙏🙏🙏🙏🙏🙏🙏


திராவிடச் சான்று - தாமஸ் டிரவுட்மன்

 


இந்த நூல் மொழியியல் ஊடாக இனவியல் ஆராய முற்படுகிறது.


பிரான்ஸிஸ் ஒயிட் எல்லிஸ்  (Francis Whyte Ellis) - 1777 - 1819:-


👉 1816இல் பிரான்ஸிஸ் ஒயிட் எல்லிஸ் (Francis Whyte Ellis) முதன்முதலாக “திராவிட மொழி” குடும்பம் என்ற கருத்து முன்வைத்தார்.


👉”திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்னும் புகழ் பெற்ற நூலைக் கால்டுவெல் (Dr Robert Caldwell) எழுதுவதற்கு 40 ஆண்டுகள் முன்னரே இது நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. 1856இல் வெளிவந்த A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages என்ற நூலாகும்.





👉 திருவள்ளுவரின் உருவம் பொறித்து நாணயம் வெளியிட்டவர் பிரான்ஸிஸ் ஒயிட் எல்லிஸ் (Francis Whyte Ellis) அவர்கள்.  வள்ளுவ நாணயம் அன்றைய அதிகபட்ச செவ்வாணி நாணயமான “இரட்டை வராகனாவில்” பொறிக்கப்பட்டது.

👉 திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முன்னொடி எல்லிஸ் அவர்கள்

👉 சென்னை நகரில் நிலவிய குடிநீர்த் தட்டிப்பாட்டினைப் போக்கப் பல கிணறுகளை வெட்டுவித்த எல்லிஸ் அவற்றில் பாடல் வடிவில் கல்வெட்டுகளைப் பதித்திருக்கிறார். இவற்றில் ஒன்று இராயப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோயிலில் இருந்தது.(இக்கல்வெட்டு இப்பொழுது திருமலை நாயக்கர் மகால் அருகாட்சியகத்தில் உள்ளது)

இக்கல்வெட்டில் “இருபுலனும் வாய்ந்த மலையும் வருபுனலும், வல்லரணு நாட்டிற் குறுப்பு” என்ற குறளைப் எல்லிஸ் மேற்கோளாகக் கல்வெட்டில் பதித்திருக்கிறார்


எல்லிஸ்யின் பதிவிகள் வருமாறு:-

1798 - வருவாய்த்துறைச் செயலரின் உதவியாளர்

1801 - வருவாய்த்துறைத் துணைச்செயலர்

1802 - வருவாய்த்துறைச் செயலர்

1806 - மசூலிப்பட்டின மாவட்ட நீதிபதி

1809 - நிலத்தீர்வை ஆட்சியர்

1810 - சென்னை ஆட்சியர்

1812 - புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியும், சென்னை இலக்கிய கழகத்தையும் நிறுவினார்.

1819 - இராமதாதபுரத்தில் மறைவு (09-03-1819)





எல்லிஸ் மறைந்த பிறகு சென்னையின் ஆளுநராக தாமஸ் மன்றோ - Sir Thomas Munro இருந்தார் (அண்ணா சாலையில், தீவுத் திடல் அருகே, குதிரை மீது கம்பீரமான அமைதியுடன் வீற்றிருக்கும் ஒரு ஆங்கிலேயரின் சிலை. மதம், மொழி ஆகியவற்றைக் கடந்து மனிதத்தன்மையுடன் நிர்வாகம் செய்ததால் அவர் புகழ் பெருகியது. ‘மன்றோலப்பர்' என்று குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும் அளவுக்கு அவர் மக்களால் நேசிக்கப்பட்டார்)


மொழிக் குடும்பம்:-


சமஸ்கிருதம், இலத்தீன், கிரேக்கம் ஆகியவை பற்றி பேசுகையில் “எந்த ஒரு மொழிநூலாரும் இம்மூன்றையும் ஒருங்கே வைத்து ஆராயும்போது அவை ஒரு பொதுமூலத்திலிருந்து கிளைத்தவை என்பதை நம்பாமல் இருக்க முடியாது”

                           - சர் வில்லியம் ஜோன்ஸ்


1780களில் மூன்று முக்கிய சாதனைகள் நிகழ்ந்தன

    • சர் வில்லியம் ஜோன்ஸ் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பம் குறித்து முதன்முதலாக முன்வைத்த கருத்து.
    • வில்லியம் மார்ஸ்டென் (William Marsden) மலெய-பாலினேசிய மொழி குடும்பம் பற்றி முதன்முதலாக முன்மொழிந்தது.
    • ரோமானி மொழிகளின் மூலம் பற்றிய கருத்து

1816இல் பிரான்ஸிஸ் ஒயிட் எல்லிஸ் (Francis Whyte Ellis) முதன்முதலாக எடுத்துரைத்த “திராவிட மொழி” குடும்பம் என்ற கருத்து.


நாம் இப்பொழுது திராவிடம் என்றழைக்கிற மொழிக் குடும்பம் சார்ந்த மொழிகளை எல்லிஸ் பட்டியலிடுகிறார். செந்தமிழ், கொடுந்தமிழ்; இலக்கணமுடைய தெலுங்கு, அதன் கொச்சை வழக்கு; பழைய, புதிய கன்னடம்; மலையாளம் மற்றும் துளு, சிங்களம், மராத்தி, ஒரியா.. இவைகள் ஒரே மூலத்தைக் கொண்டவையல்ல என்றாலும் இவற்றிலிருந்து ஏராளமான சொற்களைக் கடன் பெற்றுள்ளன. கங்கை பகுதியில் பேசப்பட்டும் மால்டோ (Malto) என்ற மொழியும் திராவிட மொழிக் குடும்பம் என்று எல்லிஸ் அன்றே இனங்கண்டுள்ளார்.

தெலுங்கு-சமசுகிருத வேர்ச்சொல் வேற்றுமை, தமிழ்-தெலுங்கு-கன்னடம் வேர்ச்சொல் ஒற்றுமை ஆகியவை இதன் மையமாகும்.


தென்னிந்திய மொழிகள் தம்முள் உறவுடையன; அவை சகசுகிருத்த்திலிருந்து பிறந்தவை அல்ல என்பதன் மூலம் திராவிடச் சான்று முதன்முதலில் எல்லிஸ் வெளியிட்டார்.


தொல்காப்பியமும் பாணினியும் :-

                      அட்டாத்தியாயி பழைய சமசுகிருத மொழிக்கான இலக்கண நூலாகும். பாணினி என்பவரால் எழுதப்பட்ட இந்நூல் சுருக்கமாக இருந்தாலும் சமசுக்கிருத இலக்கணத்தின் எல்லா அம்சங்களையும் விளக்குகிறது.

பாணினிக்கு முன்பே இலக்கண நூல்கள் இருந்ததைப் பாணினி மற்றும் உரைகாரர் குறிப்பிலிருந்து அறிய முடிகிறது. “ஐந்திரம்” உட்பட 11 வகை இலக்கணப் பள்ளிகள்/முறைகள் முன்பே இருந்தன என தெரிகிறது.


👉 தொல்காப்பிய நூலுக்குத் தரப்பட்டுள்ள பனம்பாரனாரின் பாயிரம் ஆகும். இதில் 'ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' என்று பனம்பாரனார் குறிப்பிட்டுள்ளார். 

“ஐந்திரம்” பற்றிய பர்னல் (Arthur Coke Burnell) ஆய்வு தொல்காப்பியம் பாணினியின் காலத்துக்கு முந்தியது என்பதைக் காட்டுகிறது.


👉 பாணினியின் மரபு சாராத இலக்கண நூலான கச்சாயணம் (Kaccayana) - பாலி இலக்கண நூல். இதை இயற்றிய காத்தியாயனர் (Kātyāyana) கௌதம புத்தரின் முதன்மைப் பத்து சீடர்களில் ஒருவர்.


👉 புத்தர் கூட ஒரு பிராகிருத மொழியிலேயே தனது போதனைகளை செய்தார். பாளி மொழியும் ஒரு பிராகிருத மொழியே. பெரும்பான்மையான தேரவாத புத்த மத நூல்களும் சூத்திரங்களும் பாளி மொழிலேயே உள்ளன. அசோகரின் கல்வெட்டுகளும் இம்மொழிலேயே உள்ளது. 

இந்த பிராகிருத வழக்கு மொழிகளில் சொல்லாடலிலும் சொற்பிரயோகத்திலுமுள்ள வேறுபாடுகள் மிகச் சொற்பமே. இவற்றை ஒழுங்கு படுத்தி, (சம்யக்+கிருதம்- structured) பொதுத் தொடர்புக்காக உருவாக்கப் பட்டதே “சமசுகிருதம்”


👉 தொல்காப்பியர் காலம் பாணினியின் காலமான கி.மு 4ஆம் நூற்றாண்டுக்கு, புத்தர் காலமான கி.மு 6ஆம் நூற்றாண்டுக்கு முற்றப்பட்டது. தொல்காப்பியர் கி.மு 8ஆம் நூற்றாண்டுக்கு வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் கமல் சுவெலேபில், தொல்காப்பியத்தின் முக்கிய ஊர்-உரையான ஆரம்ப அடுக்கு 150 கி.மு அல்லது அதற்குப் பிறகுதேதியிட்டார்.


👉 தொல்காப்பியமும், அட்டத்தியாயியும் விண்ணிலிருந்து குதிக்கவில்லை. அது வளர்ந்து கொண்டிருந்த இலக்கண மரபின் குறைநிறைகளை உள்வாங்கி ஏற்கப்பெற்று உருவாக்கப்பட்டவை (Subramaniam-1957). தொல்காப்பியம் தமிழுக்கே உரிய முறையில், சமட்கிருதக் குறிப்பின்றி, தமிழிலக்கணத்தை விளக்குகிறது.


ஆரியம் போல் உலக வழக்கழிந்து ஓழுயா


“கன்னடமும் களி தெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன் உதரத்து உதித்தெழுந்தே ஒன்று பல ஆயிடுனும்”


இந்நூல் முற்றுப்புள்ளி அல்ல; ஒரு தொடக்கம்; மற்றவர்களுக்கு ஒரு தூண்டுகோல்.

                          - தாமஸ் டிரவுட்மன்


                          🙏🙏🙏🙏🙏🙏🙏


இலக்கற்ற பயணி - எஸ். ராமகிருஷ்ணன்

 


பயணமும் புத்தகங்களும் தான் எனது இரண்டு சிறகுகள் என்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். 

இலக்கற்ற பயணி வாசிப்பதன் மூலம் நாம் இந்த உலகை, மனிதர்களை, கலை இலக்கியங்களின் முக்கியத்துவத்தை, வாழ்க்கையின் அழகியலை, இம்மாபெரும் பிரபஞ்சத்தில் நாம் ஒரு சிறு துளியென்றும் உணர முடியும். 


நாம் அறியப்படாத செய்திகளும் அறிய வேண்டிய செய்திகளும் பரவி கிடக்கின்றன. அதில் ஒன்று, 

         👉 " கனாடவின் துருவப்பகுதியில் உள்ள பூர்வகுடிகளை Inuit என்று அழைக்கிறார்கள். அவர்கள் குடியிருக்கும் பகுதி First Nation என்று குறிப்பிடுகிறது. எஸ்கிமோ என்று நாம் குறிப்பிடுகிறோம் இல்லையா? அந்தச் சொல் அங்கே தவறானது என்று விலக்கப்பட்டிருக்கிறது. காரணம், எஸ்கிமோ (Eskimo) என்பதற்கு பச்சை மாமிசம் உண்பவர்கள் என்று பொருள் , ஆகவே அது பூர்வகுடிகளை இழிவுபடுத்தும்சொல் என்று கனடாவாசிகள் அதைப் பயன்படுத்துவதில்லை ". 

          👉 “வரலாற்றை உருவாக்குவது மனிதர்களின் சாதுர்யங்களில் ஒன்று. அதன்வழியே கேள்விகேட்பதும், உண்மையை விசாரிப்பதும் நிராகரிக்கப்பட்டுவிடுகின்றன. ஆகவே, வரலாற்றைத் தனக்கு ஏற்ப வளைத்துக் கொள்ளவும், திருத்திக்கொள்ளவுமே அதிகாரம் ஆசைப்படுகிறது.”

         👉 வெரியர் எல்வினே (Verrier Edwin) வாழ்க்கை குறிப்புகள் அடங்கிய “எல்வினின் காலடிகள்” என்ற தலைப்பு மற்றும் “ரிவேரா ஓவியங்கள்” (Diego Rivera) என்ற தலைப்பும் தனிச்சிறப்பானது.  

         👉 “கபிலரும் மருதனும் காற்றில் வாழ்கிறார்கள்” என்ற தலைப்பில்….. சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ள ஊர்களைத் தேடிப்போய் காணும்போது மனதில் இனம் புரியாத ஏதோவொரு சந்தோஷம் உண்டாகிறது. சங்க இலக்கியத்தின் கபிலர் தனிப்பெரும் ஆளுமை கொண்ட கவி…. மதுரை மாநகரின் சிறப்புகளை ஒரு ஆவணப்படம் போல மிக நுட்பமாக விவரிக்கும் மதுரைக்காஞ்சி, பண் டைய மதுரையின் உன்னத சாட்சியாக உள்ளது, அதற்கு முக்கியகாரணம் மாங்குடி மருதனாரின் கவித்துவமே”

           👉 “நயாகரா முன்னால்” என்ற தலைப்பில்….. அருவியைப் பற்றி how big they are and how small I am என்றொரு வசனம் இடம் பெறும், அந்த வார்த்தைகள் எவ்வளவு பொருத்தமானவை என்பதை நயாகராவின் முன்னால் நின்றபோது முழுமையாக உணர்ந்தேன்.

                             - எஸ். ராமகிருஷ்ணன்


                       🙏🙏🙏🙏🙏🙏🙏🙏