பயணமும் புத்தகங்களும் தான் எனது இரண்டு சிறகுகள் என்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.
இலக்கற்ற பயணி வாசிப்பதன் மூலம் நாம் இந்த உலகை, மனிதர்களை, கலை இலக்கியங்களின் முக்கியத்துவத்தை, வாழ்க்கையின் அழகியலை, இம்மாபெரும் பிரபஞ்சத்தில் நாம் ஒரு சிறு துளியென்றும் உணர முடியும்.
நாம் அறியப்படாத செய்திகளும் அறிய வேண்டிய செய்திகளும் பரவி கிடக்கின்றன. அதில் ஒன்று,
👉 " கனாடவின் துருவப்பகுதியில் உள்ள பூர்வகுடிகளை Inuit என்று அழைக்கிறார்கள். அவர்கள் குடியிருக்கும் பகுதி First Nation என்று குறிப்பிடுகிறது. எஸ்கிமோ என்று நாம் குறிப்பிடுகிறோம் இல்லையா? அந்தச் சொல் அங்கே தவறானது என்று விலக்கப்பட்டிருக்கிறது. காரணம், எஸ்கிமோ (Eskimo) என்பதற்கு பச்சை மாமிசம் உண்பவர்கள் என்று பொருள் , ஆகவே அது பூர்வகுடிகளை இழிவுபடுத்தும்சொல் என்று கனடாவாசிகள் அதைப் பயன்படுத்துவதில்லை ".
👉 “வரலாற்றை உருவாக்குவது மனிதர்களின் சாதுர்யங்களில் ஒன்று. அதன்வழியே கேள்விகேட்பதும், உண்மையை விசாரிப்பதும் நிராகரிக்கப்பட்டுவிடுகின்றன. ஆகவே, வரலாற்றைத் தனக்கு ஏற்ப வளைத்துக் கொள்ளவும், திருத்திக்கொள்ளவுமே அதிகாரம் ஆசைப்படுகிறது.”
👉 வெரியர் எல்வினே (Verrier Edwin) வாழ்க்கை குறிப்புகள் அடங்கிய “எல்வினின் காலடிகள்” என்ற தலைப்பு மற்றும் “ரிவேரா ஓவியங்கள்” (Diego Rivera) என்ற தலைப்பும் தனிச்சிறப்பானது.
👉 “கபிலரும் மருதனும் காற்றில் வாழ்கிறார்கள்” என்ற தலைப்பில்….. சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ள ஊர்களைத் தேடிப்போய் காணும்போது மனதில் இனம் புரியாத ஏதோவொரு சந்தோஷம் உண்டாகிறது. சங்க இலக்கியத்தின் கபிலர் தனிப்பெரும் ஆளுமை கொண்ட கவி…. மதுரை மாநகரின் சிறப்புகளை ஒரு ஆவணப்படம் போல மிக நுட்பமாக விவரிக்கும் மதுரைக்காஞ்சி, பண் டைய மதுரையின் உன்னத சாட்சியாக உள்ளது, அதற்கு முக்கியகாரணம் மாங்குடி மருதனாரின் கவித்துவமே”
👉 “நயாகரா முன்னால்” என்ற தலைப்பில்….. அருவியைப் பற்றி how big they are and how small I am என்றொரு வசனம் இடம் பெறும், அந்த வார்த்தைகள் எவ்வளவு பொருத்தமானவை என்பதை நயாகராவின் முன்னால் நின்றபோது முழுமையாக உணர்ந்தேன்.
- எஸ். ராமகிருஷ்ணன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏