தமிழரின் ஓவியகலை மரபு - தோழர் வீர சந்தானம்

ஓவியர் வீர சந்தானம் அவர்கள் “தமிழர் அறிவியல் மரபு” என்ற நூலில் எழுதிய கட்டுரையை இங்கே கொடுத்துள்ளோம். 



ஆதி மனிதன் தன் உணர்வுகளை வெளிப்படுத்த விரும்பியபோது அவன் வாழ்ந்த இடத்தில் சூழ்ந்திருந்த கற்பாறைகளில் கோடுகளால் வெளிப்படுத்தினான்அந்தக் கற்பாறைக் கோடுகளே ஆதி ஒவியமாக அறியப்படுகின்றன.


புள்ளியில் தொடங்கிய கோடுகள் நீண்டுவளைந்துநெளிந்துபல உருவக் கோடுகளாய்ப் பரவி அவர்களது வாழ்க்கை மகிழ்வுகளையும் ஆடல்பாடல்களையும் வேட்டைக்குப் பயன்படுத்திய கருவிகளையும் ஓவியக் கோடுகளாகத் தீட்டி இருக்கிறார்கள்இக்கோடுகளே வரலாற்றைப் பதிவு செய்யும் சாட்சியங்களாக விளங்குகின்றன.


உலக நாகரிகத்தின் முதன்மையானது என்று குறிப்பிடப்படும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து வெளிநாகரிகம் முதற்கொண்டு இன்றைய கணினிக் காலம் வரை கோடுகளே முதன்மை பெற்று வருகின்றனசிந்து வெளிநாகரிகத்தின் அடையாளங்களாக ஏராளமான சுடுமண் சிற்பங்கள் முத்திரைகளாகப் கிடைக்கப் பெற்றுள்ளன.


கற்பனைத் திறத்திற்கு ஏற்ப உருவங்களை உருவாக்கி இருக்கின்றார்கள்இரண்டு கொம்புகளே உடைய மனிதன்மீன்எருதுவரிக்கோடுகளையுடைய புலிமரம்காண்டாமிருகம்எருமைகாளையானைஉடைந்த பானைகள்பிறப்பு பற்றிய முத்திரைகள் கிடைத்துள்ளனஇச்சின்னங்கள் ஹரப்பாமொகஞ்சதாரோ ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழ்வராய்ச்சிகளில் கிடைத்துள்ளன.


உலகத்தின் பல்வேறு இடங்களில் குகை ஓவியங்கள் காணப்படுகின்றனஏடறியா வரலாற்றுக்கு முந்தையக் காலக் கோட்டோவியங்கள் தமிழகத்தில் ஏராளமாகக் காணப்படுகின்றனஇக்கோடுகளில் ஆதித்தமிழர்களின் வாழ்நிலை சித்தரிக்கப்பட்டுள்ளதுகுகை ஒவியங்கள் பெரும்பாலும் நீலகிரிகோயம்புத்தூர்தருமபுரிவட ஆர்க்காடுதென்னார்க்காடுதிருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன.


தருமபுரி மாவட்டம் மல்லப்பாடியில் உள்ள பாறை ஓவியத்தில் குதிரை மீது அமர்ந்த ஒரு வீரன் காணப்படுகின்றான்இவ்வோவியம் வெண்ணிறக் கோட்டோவியமாக வரையப்பட்டுள்ளது.




விழுப்புரம் மாவட்டம் கீழ்வாலை என்ற ஊரில் உள்ள இரட்டைப்பாறையில் செம்மண் வண்ணத்தினால் வரையப்பட்டுள்ள ஓவியத்தில் பறவையின் முக அமைப்புடைய மனிதர்கள் காணப்படுகிறார்கள்இவ்வோவியம் மூவாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முந்தையதாகக் கணக்கிடுகிறார்கள்.






செத்தவாரை என்ற இடத்தில் எழில்மிக்க மான் உருவ ஓவியம் காணப்படுகின்றதுஐயனார் மலையில் எருமைகரடிபுலிமீன் போன்ற உருவங்கள் செம்மண் நிற ஓவியக் கோடுகளால் வரையப்பட்டுள்ளனஉள் பகுதிகளில் வெண்மை நிறம் பூசப்பட்டுள்ளனஇவ்வோவியங்களில் ஒரே ஒரு மனித உருவம் காணப்படுகின்றதுஇவை கீழ்வாலை ஓவியத்தை ஒத்திருப்பதாகக் கலையியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.




கோயம்புத்தூரில் வெள்ளெருக்கம்பாளையம் அருகில் உள்ள வேட்டைக்காரன் மலையில் உள்ள ஓவியங்களில் யானையும்குதிரையும்மனிதர்களும் காணப்படுகின்றனஆறு மனித உருவங்கள் கைகோர்த்து நடனமாடுவது போல் காணப்படுகின்றனயானைகுதிரை ஆகிய விலங்குகளில் மனிதர்கள் அமர்ந்திருப்பது போன்ற ஓவியங்களும் காணப்படுகின்றன





இவையொத்த ஓவியங்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாசினாக்குடியில் காணப்படுகின்றனமனிதர்கள் யானையில்புலியில்மானில்மயிலில் அமர்ந்த நிலையில் உள்ளனர்இவர்கள் கடவுளர்கள் என்று நம்பப்படுகின்றனர்இவ்வோவியங்கள் 2300 ஆண்டு வகையைச் சேர்ந்தவகையாகும்இவை போல் ஆலம்பாடிபதியாண்டாள்கொல்லூர்மல்லசமுத்திரம் போன்ற இடங்களிலும் ஓவியங்கள் காணப்படுகின்றன.


கிருஷ்ணகிரி மல்ல சமுத்திரத்தில் உள்ள ஓவியங்கள் வெள்ளை நிறக் கோடுகளால் எழுதப்பட்டுள்ளனஇவற்றில் புரிந்து கொள்ளப்பட முடியாத ஒரு விலங்கு வியக்கும் வண்ணம் காணப்படுகின்றதுமனிதனின் தலையில் அலங்கரிக்கப்பட்ட சிறப்பான தலைப்பாகை காணப்படுகின்றதுசமூக வாழ்க்கையில் தலைவன் ஏற்றுக் கொண்ட நிலையை ஏற்றுக் கொண்டது போல் தெரிகிறது.


திண்டுக்கல் மாவட்டம் சிறுமலைக் குகை ஓவியங்கள் பெரும்பாலும் வெண்ணிறக் கோட்டோவியங்களாகவே காணப்படுகின்றனஇவ்வோவியங்களில் அலங்கரிக்கப்பட்டு அமர்ந்த நிலையில் அரசனும்இளவரசனும் வீற்றிருக்க அருகில் ஆயுதம் ஏந்திய வீரர்களும் காணப்படுகிறார்கள்இவை சமுதாய வாழ்க்கையில் அரசு உருவான காலத்தைப் எதிரொளிப்பதாக இருக்கலாம்.


திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள குடியம் என்ற ஊரில் உள்ள குகையில் காணப்படும் கோடுகள் மிக மிகத்தொன்மையானவை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்இன்னும் ஏராளமான குகைகளில் நமது முன்னோர்களின் கலைப்படைப்புகள் மறைந்திருக்கலாம்ஆய்வாளர்கள் தொடர்ந்து முயற்சி செய்தால் நமது வரலாறு மேலும் விரிவடைய வாய்ப்புண்டுஇருக்கும் ஓவியங்களும் நம் மக்களால் பாதுகாக்கப்படாமல் இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.


ஓவியக் கோடுகளை நம் கலைஞர்கள் பல்வேறு ஊடகங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள்முத்திரைகள்உலோகத்திலும்சுடு மண்ணிலும் காணப்படுகின்றனஇவை கோட்டு வடிவங்களாகவும்புடைப்பு அச்சு முறையிலும் அமைந்ததாகவும் காணப்படுகின்றனஅரசர்களின் கொடிஅவர்கள் வணங்கிய கடவுளர்கள்அவரவர் சின்னங்கள் ஆகியவற்றையும் கோடுகளால் வரைந்திருக்கிறார்கள்செப்புத் தகடுகளில்ஓலைச்சுவடிகளில் ஓவியக் கோடுகளோடு எழுத்தையும் பதிவு செய்திருக்கிறார்கள்.


வரலாற்றைமருத்துவத்தைபுராணத்தைஇலக்கியங்களை ஓவியத்தோடு படைத்திருக்கிறார்கள்காதல் மங்கையரின் மார்பகங்களிலும்முதுகுகளிலும்செம்பஞ்சுக் குழவையால் ஓவியம் வரைந்ததைத் தொய்யில் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.


பெண்கள் தங்கள் வீட்டின் முன்வாசலில் சுவரில்தெருக்களில் கோலங்கள் போட்டுள்ளனர்தம் கற்பனைகளில் மிதந்து வரும் விலங்குகள்பறவைகள்பூச்சிகள்பூக்கள் என்று தம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் ஆயிரம் ஆயிரம் கோடுகளால் வெளிப்படுத்தியுள்ளனர்.


திரைச்சீலைகளில் முதலில் கோடுகள் போட்டு அதன் தன்மை குலையாமல் வண்ணங்கள் தீட்டும் கலையை நம்முன்னோர்கள் அறிந்திருக்கிறார்கள்.


''ஒருமுக எழினியும்பொருமுக எழினியும்

கரந்துவரல் எழினியும் புரிந்துடன் வகுத்தாங்கு

ஓவிய விதானத் துரைபெறு நித்திலத்து

மாலை தாமம் வளையுடன் நாற்றி''


என்ற சிலப்பதிகாரத்தில் அரங்கேற்றுக் காதை வரிகளால் அறியலாம்.


தோலைப்பதப்படுத்தி அதில் ஓவியக் கோடுகளை வரைந்து உள்பகுதியில் வண்ணங்கள் குழைத்துத் தீட்டி தோல்பாவை மூலம் மக்களுக்குக் ''கதை சொல்லிகளாக'' வாழ்ந்து கலையை வளர்த்திருக்கிறார்கள்.


இரப்பாரை யில்லாயி னீர்ங்கண்மா

மரப்பாவை சென்று வந்தற்று


என்ற திருக்குறள் அடிகளில் மரப்பாவை பயிற்று வருவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ''கை புனைந்து இயற்றாக் கவின்பெறுவனப்பு'' என்று சங்க இலக்கியம் குறிக்கின்றது. ''கண்ணுள் வினைஞர்'' என்று ஓவியர்களை பழம்பெரும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றனஓவியத்தை ''ஓவம்'' என்கிறார்கள்மணிமேகலையில் ''ஓவியச் செந்நூல் உரைநூல் கிடைக்கையும்'' என்று வருகிறது.


நடுகல் வழிபாடு என்பது ஆதிகாலம் முதல் இன்றைய காலம் வரை நீண்ட வரலாறு கொண்டதாகும்கி.பி. 5-ஆம் நூற்றாண்டு முதல் 10-ஆம் நூற்றாண்டு வரையில் ஏராளமான நடுகற்கள் காணப்படுகின்றனஇவை பெரும்பாலும் பல்லவர் காலமாகும்.


போரில் வீர மரணம் அடைந்தோரின் கற்களின் மேற்புறத்தில் செதுக்குச் சிற்பமாகவும்கோட்டுச் சிற்பமாகவும் வடித்துள்ளார்கள்வீரர்களின் பெயர் மற்றும் நிகழ்வுகளை எழுத்தில் பதிவு செய்துள்ளார்கள்பின்னாளில் இதுவே குலதெய்வ வழிபாடாகவும் மாற்றம் பெற்றுள்ளதுதஞ்சை மாவட்டம் குடந்தை அருகே கி.பி. 884 திரும்புறம்பியப் போரில் மாண்ட போர் வீரர்களின் நினைவாகப் ''பள்ளிப் படை வீடு'' என்ற நடுகல் கோவில் உள்ளதுஇதைக் கல்வெட்டு ஆய்வறிஞர் தி.வை சதாசிவப் பண்டாரத்தார் பதிவு செய்துள்ளார்.


நடுகல் செதுக்குச் சிற்பங்கள் இலக்கணங்களை மீறிப் கோட்டோவியங்கள் சிறப்பாக்கப்பட்டுப் பக்க வாட்டில் உருவங்கள் அகழ் ஓவியக் கோடுகளாகவும் வெளிப்படுகின்றனநடுகற்களே முப்பரிமாண வடிவங்களுக்கு முன்னோடி எனலாம்.


கோடுகள்ஓவியங்கள்செப்புத் தகடுகள்அச்சுகள்துணிகள்கற்கள்உடல்கள்வீட்டு வாசல்கள் என்று பல்வேறு தளங்களில் இருந்த கோடுகளும் ஓவியங்களும் பல்லவர் காலம்சோழர் காலம்நாயக்கர் காலம்மராட்டியர் காலம் என்று காலங்கள் தோறும் விரிவு படுத்தப்பட்டு வந்தன.


சோழர்கால ஓவியங்கள் கி.பிஆயிரத்தைச் சேர்ந்தவைஇவ்வோவியங்கள் தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் கருவறை முதல் தளச் சுற்றுச் சுவரில் பாதுகாப்பாக வரையப் பட்டுள்ளனஇவற்றின் ஓவியக் கலையின் மேன்மை தெரிவதோடு அஜந்தா ஓவியத்தின் சாயலோடு இவை ஒத்துப் போகின்றனஇவை இன்னும் அழியாமல் இருப்பதற்கு FRESCO என்னும் சுவர் ஓவிய முறையில் வரையப்பட்டதும் ஒரு காரணமாகும்ராசராச சோழன்கருவூரார்நடனமகளிர்வீரர்கள்நடனமாடும் இசைக்கலைஞர்கள்சிவபூத கணங்கள் ஆகியவை வரையப்பட்டுள்ளனஇவையெல்லாம் கவர்ச்சியான பல வண்ணங்களோடு கோடுகளால் சிறப்பான ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.


ஒன்பதாம் நூற்றாண்டு ஓவியங்களாகப் பாண்டியர் காலச் சித்தன்னவாசல் ஓவியங்கள் திகழ்கின்றனபனைமலைகாஞ்சிக் கைலாசநாதர் கோவில் ஓவியங்களையும் இவற்றோடு குறிப்பிட வேண்டும்.


பனைமலை ஓவியம்
காஞ்சிக் கைலாசநாதர் கோவில் ஓவியங்கள்

காஞ்சிக் கைலாசநாதர் கோவில் ஓவியங்கள்



காஞ்சிக் கைலாசநாதர் கோவில் ஓவியங்கள்


சித்தன்னவாசல் ஓவியங்களில் அரசர்அரசிமீன்கள்வாத்துகள்எருமைகள்நிறைந்த தாமரைக்குளம் ஆகியவை பாண்டியர் கால ஓவியக் கலைஞர்களின் கைத் திறமைக்குச் சான்றாக உள்ளன.




சிந்தன்னவாசல் பல்லவர் காலத்து ஓவியம்


17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் நாயக்கர் கால ஓவியங்கள் தமிழகம் எங்கும் நிறைந்து காணப்படுகின்றன.


காஞ்சி திருப்பருத்திக்குன்றம்திருவாரூர் கோவில்சிதம்பரம் கோவில்குடந்தை பட்டீஸ்வரம்திருமங்கலக்குடிதஞ்சைமதுரைஅழகர்கோவில்திருவலஞ்சுழி என எல்லாக் கோவில்களிலும் ஓவியங்கள் நிறைந்து காணப்பட்டன.


திருவலஞ்சுழிபட்டீசுவரம்திருமங்கலக்குடி ஆகிய இடங்களிலுள்ள ஓவியங்களைச் குடமுழுக்கு என்ற பெயரால் அழித்து விட்டார்கள்.


திருவாரூர் நூற்றுக்கால் மண்டபத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஓவியங்கள் கேட்பாரற்று வவ்வால் எச்சத்தாலும்மழையின் ஒழுகலாலும் அழிந்து கொண்டிருக்கின்றன.


திருவிடை மருதூர்க் கோவிலில் வரைந்திருந்த ஓவியங்கள் ஏராளம். ''சித்திரபிரகாரம்'' என்ற சுற்றுப் பாதையில் தற்போது எல்லாம் மறைக்கப்பட்டுத் தமிழன் காண்பதற்கும் கற்பதற்கும் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார்கள்.


தமிழனுக்கு என்று இருந்த ஓவியக் கலை வரலாற்றை எழுதுவதை விடஅதைக் காப்பதற்கான முயற்சிதான் இன்று மிக இன்றியமையாத் தேவையாகும்அதைச் செய்வதற்கான வல்லமை தமிழர்களுக்கு என்று வருமோ?

அட்சய திருதியும் சமணமும்

முதற் சமண தீர்த்தங்கரர் ரிசபதாதர் கருப்புச் சாறு பெறும் காட்சி


 ஆதிபகவன்

நிகழ்க்கால சமணத் தீர்த்தங்கரர்களில் முதல் தீர்த்தங்கரராக திகழ்பவர் ஆதிபகவன் என்றழைக்கப்படும் ரிஷபதேவராவார்.
இப்பரத கண்டத்தின் முதல் சக்கரவர்த்தியாக திகழ்ந்தவரும் இவரே ஆவார். இவர் காலத்தில் தான் போகபூமி, கருமபூமியாக
மாறியது. போக காலத்தில் மக்கள் உழைப்பு ஏதுமின்றி, கற்பக
மரத்தை நாடி வேண்டியதைப் பெற்று வாழலானார்கள்.

கர்ம பூமி

இவ்வாறாக மக்கள் எந்த உழைப்புமின்றி வாழ்ந்தக் காலத்தில் கற்பக மரங்கள் மறையத் தொடங்கின. இதனால், மக்கள் செய்வதறியாது, தங்களின் அரசனான ஆதிபகவனை அணுகி, தங்களுக்கு உதவுமாறு வேண்டிக் கொண்டனர். பகவானும் அவர்கள் நிலையுணர்ந்து ஆறு தொழில்களை கற்பித்தார். இதனால், அவர் யுகாதி நாதர் என்று அழைக்கப்படலானார். ஆறு தொழிற்களை கற்பித்த அந்த நன்னாள் யுகாதி என்று இன்றும் அழைக்கப்படுகிறது.

இந்நாட்டில் தோன்றிய எல்லா சமண இலக்கியங்களிலும் இச்செய்தியைக் காணலாம். தமிழில் தோன்றிய சமண இலக்கியங்களும் இதனை கூறுகின்றன. சீவக சிந்தாமணி, சூடாமணி நிகண்டு, திருக்கலம்பகம், ஆதிநாதர் பிள்ளைத்தமிழ் போன்ற நூட்களில் இச்செய்தி வருவதைக் காணலாம்.

விரிவஞ்சி, எடுத்துக்காட்டாக ஒன்றை ஈண்டு சுட்டுகிறேன்.

“ஒழியாக் கற்பத்தரு மருங்கி
உலகாம் போகபூ மியிடை
பழியாப் பிணங்கிமா நிலத்தோர்
பணிந்தே நிற்பக்கரந் தருளும்
உழவே தொழில் வணிக வரைவு
உற்ற சிற்பவித் தையினால்
அழியா வகை வந்தாட் கொண்டாய்
அடியோஞ் சிற்றலழி யேலே!
– ஆதிநாதர் பிள்ளைத்தமிழ்

துறவறம்

இவ்வாறாக உலக மக்களுக்கு முதன்முதல் ஆறு தொழில்களைக் கற்பித்ததால், இவருக்கு ஆதிபிரம்மா, யுகாதிநாதன், பிரஜாபதி, ஆதிதேவன், ஆதிநாதர், ஆதிராஜர், ஆதிபகவன், ஆதிசக்கரவர்த்தி போன்ற பல பெயர்களால் அழைக்கப்படலானார்.

குறளாசிரியர் தேவர் பெருமானும், இதனைக் குறிக்கவே முதல் குறளாக,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

என்ற குறளினை அமைத்தமை இங்கு சிந்திதற்பாலது.

இல்லறத்தில் இன்பம் துய்த்து, சிறப்புற அரசாட்சி செய்து
வருங்கால், ஒரு நாள் அரண்மனையில், “நீலாஞ்சனை” என்னும் நாட்டிய பெண்ணின் நாட்டியம் அரங்கேற்றப்படுகிறது. அரங்கேற்றத்தின் பாதியிலேயே அப்பெண் அகால மரணம் அடைகிறாள். இதனால் அதிர்ச்சியுற்ற ஆதிராசருக்கு அக்கணமே
வைராக்கியம் ஏற்படுகிறது. தன் முதல் மகனான பரதனிடம் அரசாட்சியை ஒப்படைத்துவிட்டு, அரச வாழ்வைத் துறந்து துறவேற்கிறார்.

ஆகார தானம்

அவ்வாறு அரச வாழ்வைத் துறந்த விருஷபதேவர், நாட்டை விட்டு அகன்று காட்டில் வாழலானார். மெளனம் ஏற்றார். தொடர்ந்து ஆறு மாதங்கள் நின்ற வண்ணமே (கயோத்சர்கம்) தவம் ஏற்றலானார். ஆறு மாதங்கள் கழிந்தப் பிறகு ஆகாரம்
ஏற்க (பாராணை விதி) நாட்டுக்கு வருகிறார். மக்கள், இதற்கு முன்னர் துறவியர்களைக் கண்டதில்லையாதலால், ரிஷபநாதரை
இன்னும் அரசராகவே கருதி அவருக்கு தங்களிடம் உள்ள
விலை உயர்ந்த பொருட்களை அளிக்க முன்வந்தனர். இதனால்,
மீண்டும் தவத்தினைத் தொடரலானார். இவ்வாறாக மேலும் ஆறு மாதங்கள் கழியலாயின.

தான தீர்த்தங்கரர்

இங்கு ஒன்றைக் குறிப்பது நல்லது என்று நினைக்கிறேன். அதாவது, சமண துறவிகள் பாராணை செல்லும்போது எந்த இல்லறத்தான் வீட்டின் முன்பும் நிற்க மாட்டார்கள். அதுபோல் யாரிடமும் பேசவும் மாட்டார்கள். அவர்கள் தங்கள் வழியேச் செல்வார்கள். அத்துறவிகளைக் கண்ட இல்லறத்தான் தானே முன்வந்து அவர்களுக்கு ஆகாரத் தானம் கொடுக்க வேண்டுமேயன்றி துறவிகள் தாமாக யாரிடமும் சென்று உண்ண கூடாது என்பது சமணத் துறவிகளின் விதி. ஆகாரம் ஏற்கும்போது, நின்று கொண்டு தன் இருகைகளால்தான் உணவு ஏற்கவேண்டும். பாத்திரம் ஏதும் உபயோகப்படுத்தக் கூடாது.

அவ்விதியின்படி, மீண்டும் பாராணை ஏற்க அஸ்தினாபுரம் வருகிறார் விருடபதேவர். அச்சமயம், அந்நாட்டின் இளவரசனான, சிரேயாம்ச குமாரனுக்கு தான் முற்பிறவியில் துறவிகளுக்கு ஆகார தானம் கொடுத்த நினைவு ஏற்பட்டு, பாராணைக்காக வந்த விருஷபசுவாமிக்கு “கரும்பு சாற்றினை” அளிக்கிறான். இதனால் நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ந்தனர். இளவரசன் சிரேயாம்ச குமாரன் பகவானுக்கு ஆகார தானம் அளித்ததால் “தான தீர்த்தங்கரர்” எனப் போற்றப்பட்டார்.

தான பூஜை

ஆதிபகவன் பாராணை மேற்கொண்டதை தன் அவதி ஞானத்தால் அறிந்த தேவேந்திரனும், இதர தேவர்களும் பெருமகிழ்ச்சியடைந்து, பஞ்சாச்சரியம் பொழிந்தனர். அப்பொழுது விழுந்த விலையுயர்ந்த இரத்தின, மாணிக்க கற்களை, மக்கள் தங்கள் வீடுகளுக்கு அள்ளிச் சென்றனர். சிரேயாம்ச குமாரன் ஆகாரதானம் அளித்த அந்த நன்நாளே அட்சய திருதியாகவும் ஆகாரதானம் போற்றும் நாளாகவும் போற்றப்படுகிறது.

அட்சயதிருதியை

அட்சயதிருதியின் நோக்கமே பிறருக்கு தானங்கள் கொடுக்கவேண்டும் என்பதுதான். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இல்லறத்தானின் (சிராவகத்தான்) கடமைகளில் ஒன்றான துறவறத்தாரை ஆகார தானத்தால் தாங்குதல் ஆன விருந்தோம்பலைக் குறிப்பதாகிறது. ஆனால், அதுவே பின்னாளில் நோக்கம் மாறி தேவர்களால் பொழியப்பட்ட விலையுயர்ந்த நகைகளை மக்கள் தங்கள் வீடுகளுக்கு அள்ளி சென்றதை எடுத்துக்கொண்டு விட்டார்கள். அதன் அடிப்படையில் அன்றைய தினம் நகை வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நினைப்பில் செயல்பட தொடங்கிவிட்டார்கள்.

தானம் போற்றுவோம்

பண்டிகைகளின் உண்மையான நோக்கத்தை அறிந்து, ஏழைகளுக்கு தம்மால் முடிந்ததைக் கொடுத்து உதவுங்கள். அதனால் அவர்கள் மனம் குளிர்ந்தால், தன்னாலேயே நம் செல்வம் பெருகும். அப்படி முடியாதவர்கள் ஏழை சிறுவர்களுக்கு கரும்புச் சாற்றினையாவது கொடுத்து “அட்சயதிருதியை” கொண்டாடுங்கள்.

– இரா. பானுகுமார், சென்னை

Credit :- https://jainism.tamilheritage.org/அட்சய-திருதியை/?fbclid=IwAR0sLXdxVE4VdZgmjEUIqR4SOYAN_2-6r4WfjRPozyCz_AbEVGaZ2Rqxsws


அக்கீமெனிட் பேரரசு (achaemenid empire) - கிமு 550-330

அக்கீமெனிட் பேரரசு (achaemenid empire) - கிமு 550-330


முதல் பாரசிக பேரரசுஇப்பேரரசு “சைரசு” என்பவரால் நிறுவப்பட்டது. இது ஈரானின் பார்ஸ் மாகாணத்தில் தொடங்கி விரிவடைந்த ஒரு பேரரசு ஆகும்.


பாரசிக மன்னன் சைரஸ்



சைரஸ்சின் நினைவிடம்


முதல் பாரசீகப் பேரரசு என்றும் அழைக்கப்படும் அச்செமனிட் பேரரசு, மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு பாரசீகப் பேரரசு ஆகும். இது கிமு 6 ஆம் நூற்றாண்டில் “சைரஸ் தி கிரேட்” நிறுவப்பட்டது, அவர் மீடியன் கூட்டமைப்பை அகற்றினார். கிமு 705 மற்றும் கிமு 675 க்கு இடையில் பெர்சியாவை ஆட்சி செய்த மன்னர் அச்செமெனெஸ் (Achaemenes) என்பவரிடமிருந்து இந்த வம்சம் அதன் பெயரைப் பெற்றது. 




கிமு 500 இல் கிழக்கில் சிந்து பள்ளத்தாக்கு முதல் கிரேக்கத்தின் வடகிழக்கு எல்லையில் உள்ள திரேஸ் மற்றும்மாசிடோன் வரை பரவியிருந்த பண்டைய உலகின் குறிப்பிடத்தக்க பகுதிகளை இறுதியில் ஆட்சி செய்ய பேரரசுவிரிவடைந்ததுஇது உலகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய பேரரசாக மாற்றியது



இறவாப்படை:

பண்டைய கிரேக்க வரலாற்றாளர் எரோடோட்டசால் குறிப்பிடும் இறவாப்படை என்பது அகாமனியப் பேரரசின்இராணுவத்தில் 10,000 வீரர்களைக் கொண்ட உயரடுக்கு கனரக காலாட்படை பிரிவுக்கு வழங்கப்பட்ட பெயர் ஆகும்பாரசீகப் பேரரசின் தொழில்முறை இராணுவமாக இருந்ததுடன்பேரரசின் காவலராக பங்களித்து இரட்டைத்திறன்களில் பணியாற்றியதுஇது முதன்மையாக பாரசீகர்களைக் கொண்டிருந்தாலும்இறவாப்படையில் மீடியர் மற்றும்ஈலாம்களும் அடங்குவர்.



அக்கீமெனிட் விழச்சி:


கிமு 330 ஆம் ஆண்டில் அகாமன்சியப் பேரரசுபேரரசன் அலெக்சாந்தரால் (Alexander the great) தோற்கடிக்கப்பட்டது


பார்த்தியா பேரரசு:  


முதலாம் அர்செஸ் (Arsaces Iபாரசீகத்தில் பார்த்தியா இராச்சியத்தை நிறுவியவர் ஆவார்இவர் பார்த்தியப்பேரரசை கிமு 247 முதல் கிமு 217 முடிய 30 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தவர்இவர் கிரேக்க செலூக்கிய பேரரசைஎதிர்த்து போரிட்டுபாரசீகத்தின் வடக்குப் பகுதிகளை கைப்பற்றிபார்த்தியா இராச்சியத்தை நிறுவியவர்.


                      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏