வரலாற்றில் பொய்கள்

வரலாற்றில் பொய்கள் - முனைவர். தேமொழி



‘தமிழ் மரபு அறக்கட்டளை’ பதிப்பித்துள்ள இந்த நூலில் இந்திய துணைக்கண்டத்தில் வரலாற்றில் பொய்களைத் திணிக்க மேற்கொள்ளப்பட்ட சில கருத்துருவாக்க முயற்சிகளை நான்கு கட்டுரைகளாக அலசி, வலுவான சான்றுகளுடன் எடுத்துரைக்கிறார்.


1. குமரிக்கண்டம் என்ற புனைவு

2. பிக்கோலிம் போர்

3. சிந்துவெளியின் குதிரை முத்திரை என்றொரு மோசடி

4. சரஸ்வதி நதி என்றொரு புரட்டு.


பதிப்புரை பகுதியில் முனைவர் க. சுபாஷினி அவர்கள் கி.பி 8ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நடந்த “The Donation of Constantine” என்ற வரலாற்றுப் பொய்களை பற்றி கூறியிருக்கிறார். 

என்னுரை பகுதியில் முனைவர்.தேமொழி ஆஷ் துரையை வாஞ்சிநாநன் சுட்டுக் கொன்ற உண்மை நோக்கத்தை விவரிக்கிறார்.

“பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே!”

“வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!!!”😂😂😂

                       🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

கோபெக்லி டெபே ( Göbekli Tepe ) - உலகின் முதல் கோயில்?

கோபெக்லி டெபே ( Göbekli Tepe ) - உலகின் முதல் கோயில்?



2018 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்ட துருக்கிய நகரமான சான்லியுர்ஃபாவிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கோபெக்லி டெப்இம்மலையை துருக்கி மொழியில்பானைவயிறு மலை ("Potbelly Hill") என்று அழைப்பர்கற்காலத்தின் போது நம்பிக்கை மற்றும் புனித யாத்திரையின்மையமாக இருந்ததாக நம்பப்படுகிறது





சுமார் 11,500 ஆண்டுகளுக்கு முன்பு மேல் மெசபடோமியாவில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை மற்றும்நம்பிக்கைகள் பற்றிய நுண்ணறிவை வழங்கும் தனித்துவமான T- வடிவ தூண்கள் காட்டு விலங்குகளின்உருவங்களுடன் செதுக்கப்பட்டுள்ளனபழமையான செதுக்கப்பட்ட கற்கள்இதுவரை உலோகக் கருவிகள் அல்லதுமட்பாண்டங்களை உருவாக்காத வரலாற்றுக்கு முந்தைய மக்களால் வடிவமைக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டன அந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள்இந்த மலையை சடங்கு தியாகங்கள் மற்றும் விருந்துகளுக்குபயன்படுத்தியதாகக் கூறுகின்றன.





இந்த கோவில்களை ஜெர்மன் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கிளாஸ் ஷ்மிட் (Klaus Schmidt) கண்டுபிடித்தார்.


மதத்தின் வளர்ச்சியைப் புரிந்துகொள்வதில் முக்கியத்துவம் பெறுகிறதுநாகரீகம் மற்றும் மதம் என்பது மனித மனதின்விளைபொருள் என்பது திண்ணம். (civilization and religion are the product of the human mind)



                  🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

பண்டைக்கால நிர்வாகம்

தமிழ்நாடு பண்டைக் காலத்தில் சேரசோழபாண்டியபல்லவ மன்னர்களால் ஆளப்பெற்றது. ஆட்சி மற்றும் பொருளாதார வளமைக்காக நிலங்கள் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டன

பண்டைய நிர்வாகம்:-

பல்லவர் காலத்தில் அவர்களது இராசியத்தை 

  1. கோட்டம்
  2. நாடு
  3. ஊர்

என பிரிக்கப்பட்டிருந்தது.


பல்லவர் கோட்டம்:-


தொண்டை நாடு பல்லவர்க்கு முன்னரே 24 கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு இருந்ததுஅவையாவன:

  1. புழல் கோட்டம்
  2. ஈக்காட்டுக் கோட்டம்
  3. மணவிற் கோட்டம்
  4. செங்காட்டுக் கோட்டம்
  5. பையூர்க் கோட்டம்
  6. எயில் கோட்டம்
  7. தாமல் கோட்டம்
  8. ஊற்றுக்காட்டுக் கோட்டம்
  9. களத்துர்க் கோட்டம்
  10. செம்பூர்க் கோட்டம்
  11. ஆம்பூர்க் கோட்டம்
  12. வெண்குன்றக் கோட்டம்
  13. பலகுன்றக் கோட்டம்
  14. இலங்காட்டுக் கோட்டம்
  15. கலியூர்க் கோட்டம்
  16. செங்கரைக் கோட்டம்
  17. படுவூர்க் கோட்டம்
  18. கடிகூர்க் கோட்டம்
  19. செந்திருக்கைக் கோட்டம்
  20. குன்றவட்டான கோட்டம்
  21. வேங்கடக்கோட்டம்
  22. வேலூர்க்கோட்டம்
  23. சேத்துர்க் கோட்டம்
  24. புலியூர்க்கோட்டம்


சோழர்கள் காலத்தில் அவர்களது இராசியத்தை 

  1. மண்டலம் மற்றும் பாடி
  2. வளநாடு
  3. நாடு
  4. ஊர்

என பிரிக்கப்பட்டிருந்தது.


சோழ மண்டலம்:-




  • ஊர் என்பது சிறிய பிரிவாக (கிராமம்ஆகும்.
  • பல ஊர்கள் கொண்டது நாடு.
  • நாடுகள் பல கொண்டதாக வளநாடு இருந்தது.
  • ஒவ்வொரு மண்டலமும் பத்து வளநாடுகளாக பிரிக்கப்பட்டதுமண்டலமானது சோழர்களின் பிராந்தியப்பிரிவுகளில் மிகப்பெரியது

சோழ நாடு தன் அதிகாரத்தின் உச்சத்திலிருந்தபோதுஅது ஒன்பது மண்டலங்களாக பிரிக்கப்பட்டிருந்ததுஇதில்இலங்கை போன்ற வெற்றிகொள்ளப்பட்ட பகுதிகளும் அடங்கும்

  1. சோழமண்டலம்
  2. தொண்டைமண்டலம் / ஜயங்கொண்ட சோழமண்டலம்
  3. கொங்குமண்டலம்
  4. பாண்டியமண்டலம் அல்லது இராஜராஜபாண்டிமண்டலம்
  5. கங்கபாடி
  6. தடிகைபாடி
  7. நுளம்பபாடி
  8. மரையபாடி
  9. மும்முடிசோழமண்டலம் / ஈழமண்டலம்


இலச்சினை

  • பாண்டியர்க்கு -> மீனும்
  • சோழர்க்குப் -> புலியும்
  • சேரர்க்கு -> வில்லும்
  • பல்லவர்க்கு -> நந்தி
  • கங்கர்க்கு -> நாகமும்
  • சாளுக்கியர்க்கு -> பன்றியும்

                 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏