மாயையும் எதார்த்தமும்
டி. டி. கோசாம்பி
யதார்த்தத்தைக் காண்பதை விட தேசபக்தியை பெரிதாக காணும் இந்திய விமர்சகர்களுக்கு சுயமரியாதை சிந்நனைகள் எரிச்சலையூட்டும். மென்மையான அல்லி மலர் போன்ற அழகிய இந்திய தத்திவத்தை ரசிப்பதைவிட, வெறும் மூட நம்பிக்கை என்ற சகதியில் ஏன் விழ வேண்டும்.
மரபுகள் ஒன்றோடொன்று தாங்களாகவே மோதிக்கொள்வதில்லை. அம்மரபுகளை பின்பற்றும் மக்களால்தான் ஒரு உடன்பாட்டிற்கு வர முடியவில்லை.
மொகஞ்சதாரோ முத்திரையில் காணப்படும் மூன்று தலைகளுள்ள கடவுள், தற்கால சிவனாக உருவெடுத்திருக்கலாம்.
சிந்துவெளி முத்திரைகளில் கணப்படும் மனிதன்-புலி உருவம்.
பார்வதியின் குழந்தை கணேசன் சிவனின் குழந்தையல்ல. அக்குழந்தையின் தலையை சிவன் கொய்து, அ்ங்கு யானையின் தலையை வைத்ததாக கதை. மற்றொரு குழந்தையாகிய ஸகந்தன், சிவனுடைய விந்துக்கும் பிறந்தவன் ஆனால் பார்வதியின் கருப்மையில் வளரவில்லை. சிவனை ஒரு உயர்ந்த கடவுளாக உயர்த்துவதன் மூலம் இப்படிப்பட்ட முட்டாள் தனமான கதைகளுக்கு விளக்கம் காணமுடியாது.
பகவத் கீதை:-
மகாபாரதப் போர் உண்மையிலேயே கூறப்பட்ட முறையில் நிகழ்ந்திருந்தால், டில்லி - தானேசுவரம் ஆகிய இரு நகரங்களுக்கிடையே நடைபெற்ற பதினெட்டு நாள் போரில், சுமார் ஐம்பது லட்சம் பேர் ஒருவரையொருவர் கொன்றிருப்பார்கள். அப்போரில் ஒரு லட்சத்து முப்பதாயிரம் தேர்களும், அதே எண்ணிக்கையிலான யானைகளும், ஏறக்குறைய அது போல மூன்று மடங்கு குதிரை வீர்ர்களும் பங்கு கொண்டிருந்திருக்க வேண்டும். இது மொத்த மக்கட்தொகை குறைந்தது இருபது கோடியாவது இல்லாமலிருந்தால், இவ்வளவு பெரிய படையை பெற்றுருக்க முடியாது. பிரிட்டிஷார் ஆண்ட காலம் வரும் வரையில் இவ்வளவு பெரிய மக்கள்தொகை இந்தியாவில் இருந்ததில்லை.
கீதையில் கூறுவது போல இரு படைகளும் மோதுவதற்கு தயாராகிவிட்ட நிலையில் தார்மீக தத்துவம் பற்றி சுமார் மூன்று மணி நேர உபதேசம் சாத்தியமா என்பதே.
மாற்றம்:-
கொள்கைகள் காலத்தைக் கடந்தவையல்ல. சமுதாயத் தேவைகளை பூர்த்தி செய்யவே சில நெறிமுறைகள் வகுக்கப்பட்டன. கீதையி்ல் “நான்கு வர்ணங்களும் என்னால் படைக்கப்பட்டவையே” (கீ 4-13). கர்மம் பற்றிய கோட்பாடு புத்த மதத்தின் கொள்கையாகும். புத்த மதம் இல்லையெனில் கீதை 2ஆம் அத்தியாயத்தில் 55 முதல் 72 வரை பாடல்கள் இருந்திருக்கவே முடியாது. இப்பாடல்களை காந்தி தனது ஆசிரம பிராத்தனைக் கூட்டத்தில் தினமும் பாடச் சொல்வார்.
கிருஷ்ணன்:-
நாராயனனுடன் கிருஷ்ணனை இணைத்து பேசுவது ஓரு செயற்கையானதே. ஏதாவது ஒரு வகையில் கிருஷ்ணனை வழிபடும் பழக்கம் இருந்திருக்க வேண்டும் பின்னர் பிராம்மணர்கள் ஈர்க்கப்பட்டனர். வேதங்களில் ஒரு விஷ்ணு இருக்கிறார் ஆனால் நாராயணர் இல்லை. நாராயணன் என்றால் ஓடும் நிரில் உறங்குபவன் ( நாரா) எனப்பொருள்படும். மெச்டோமியாலைச் சேர்ந்தயா அல்லது எங்க்கி என்பவரும் நீருக்கு மத்தியில் ஒரு அறையில் உறங்குவது போல் காணப்படுகிறார்
இது சுமேரிய முத்திரைகளில் பொறிக்கப்பட்டுள்ளதை காண முடியும். நாரா என்ற சொல் சிந்து வெளி நாகரிக காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம்.
வேதத்தில் இந்திரனே முழுமுதற் கடவுள். அவன் கொடுங்கோலனான ஒரு ஆரிய போர் வீரன். அவனுடைய புகழ் புத்த மதம் வந்த பிறகு அழிக்கப்பட்டது. யாகம் செய்வதைக் புத்த மதம் முற்றிலுமாக நிராகரித்தே காரணம்.
ரிக் வேதத்தில் காணப்படும் இந்திர எதிர்ப்பு ஆரியர்களுக்கு முந்தைய கருப்பு மக்களுக்கும் படையடுத்து வந்த ஆரியர்களுக்கும் மிடையேயான போராட்டங்களை பிரதிபலிக்கிறது.
தொடரும்….