கீழையூர், மேலப்பழுவூர், கீழப்பழுவூர்:-
இந்த கிராமத்தின் பழைய பெயர் மன்னுபெரும்பழுவூர் என இருந்தது. சோழ மன்னர்களுக்கும் “பழுவேட்டரைய” அரசர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. முதலாம் ஆதித்த சோழன் காலம் முதல் முதலாம் இராஜேந்திர சோழன் காலம் வரை சோழ மன்னர்களுடன் பழுவேட்டரையர்கள் தொடர்பு கொண்டு விளங்கியதை வரலாற்றுச்சான்றுகளுடன் அறிய முடிகிறது. பழுவேட்டரைய அரசர்கள் ஆட்சி செய்த ஊர் “பழுவூர்”.
கல்வெட்டுகள்:-
** முதலாம் ராஜராஜ சோழனது காலத்தில் அவருடைய தேவியும், பழுவேட்டரையர் மகளுமான நக்கன் பஞ்சவன்மாதேவி வேண்டுகோளுக்கிணங்கி, நெல் தானமாக அளித்த செய்தி கூறப்படுகிறது.
** இங்குள்ள கல்வெட்டுகளில் பழமையானது ஆதித்த சோழனது கல்வெட்டுகள். இதில் இடம்பெற்றுள்ள பழுவூர்மரபின் முதல் இரு மன்னர்களான குமரன் கண்டனையும், குமரன் மறவனும் இக்கோயில் எடுப்பிக்க காரணமாகஇருந்தவர்கள்.
** பழவேட்டரையன் கைக்கோள மாதேவன் ரணமுகராமன் ஆகியோரின் பெயர்கள் இங்குள்ள கல்வெட்டுகளில்காணப்படுகின்றன
இந்தப் கல்வெட்டுகளை காலவரிசைப்படி கி.பி 881 முதல் கி.பி 1020 வரை பழுவூரை ஆண்ட மன்னர்களைக்கீழ்க்கண்டவாறு வரிசைப் படுத்தலாம்.
1. குமரன் கண்டன்
2. குமரன் மறவன்
3. கண்டன் அமுதன்
4. மறவன் கண்டன்
5. கண்டன் சத்ருபயங்கரன்
6. கண்டன் சுந்தரசோழன்
7. கண்டன் மறவன்
மூத்த சகோதரர்கள் குமரன் கண்டன், குமரன் மறவன் சுந்தரசோழர் காலத்தில் வாழ்ந்தவர்கள். 'பெரியபழுவேட்டரையரையும்', 'சின்னப் பழுவேட்டரைய்ராகவும்’ இருக்காலம்
சாக்கை கூத்து:-
** கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோவிலில் கூத்துக் கல்வெட்டு உள்ளன.
**தமிழ்நாட்டின் “சாக்கைக் கூத்துக்கான” ஆரம்பகால கல்வெட்டுக் குறிப்பு (கி.பி. 979) கீழ்பழுவூரில் உள்ள ஆலந்துறையார் கோவிலில் உள்ளது
காமரசவல்லி கல்வெட்டு:-
**சுந்தரசோழனால் (கி.பி.957-974) அவன் ஆட்சி காலத்தில் கி.பி.962ம் ஆண்டில் கட்டப்பட்டதாக கல்வெட்டுகுறிப்பிடுகின்றது.
**சக்கைக் கூத்து நடத்தி, பொன்னும் நிலமும் பரிசாகப் பெற்றார். சாக்கை மாராயன் விக்ரமசோழன் காமரசவல்லிகோயிலில் மூன்று நாட்கள் சக்கைக் கூத்தை நிகழ்த்தியதாக முதலாம் ராஜேந்திரன் காலக் கல்வெட்டு (1041CE) மூலம் அறிகிறோம்
🙏🙏🙏🙏🙏🙏🙏