குறள் 1062:
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.
சாலமன் பாப்பையா விளக்கம்:
பிச்சை எடுத்துத்தான் உயிர்வாழ வேண்டும் என்ற நிலை இருந்தால், இந்த உலகைப் படைத்தவன் அங்கும் இங்கும் அலைந்து கெடுவானாக.
மு. கருணாநிதி விளக்கம்:
பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும்.
English Couplet 1062:
If he that shaped the world desires that men should begging go, Through life's long course, let him a wanderer be and perish so.
Couplet Explanation:
If the Creator of the world has decreed even begging as a means of livelihood, may he too go begging and perish.
Bhakthavatsala Bharathi:-
கடவுள் கெட்டுப்போகட்டும் என்கிறார் திருவள்ளுவர் .
"இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின், பரந்து கெடுக உலகியற்றி யான்". இந்தத் திருக்குறளைப் படிக்கப் படிக்க அறிவாராய்ச்சியியலில்(Epistemology) ஆழங்காற்பட வேண்டியுள்ளது அல்லது பொருள்கோடல்(Hermeneutics) செய்யவேண்டியுள்ளது. மேற்கூறிய குறளில் "இரந்து உயிர் வாழ வேண்டும்" சூழல் ஒருவனுக்கு ஏற்படுமானால் கடவுள் கெட்டுப் போகட்டும் என்கிறார் வள்ளுவர். இவர் எந்த மதப் பின்னணியில் திருக்குறளை இயற்றினார் எனும் விவாதம் நீண்ட காலமாக நடந்து வருகிறது. அவர் எந்தக் கருத்தியல்/ கோட்பாட்டியல் பின்புலத்தில் திருக்குறளை இயற்றினார் எனும் அறிவாராய்ச்சி நோக்கிலும் ஆராய வேண்டியுள்ளது. மேற்கூறிய குறளைப் பொருத்தவரை
வள்ளுவர் "சமத்துவச் சமூகம்" (Egalitarian society) காண விரும்புகிறார். "ஆதிப் பொதுவுடைமை "Primitive_communism” காண விரும்புகிறார். வள்ளுவரின் மானிடவியல் மிகவும் ஆழமானது. இந்த இரண்டு சமூக வடிவங்களும் ஆதிப் பழங்குடிகள் வாழ்வில் காணப்பட்டவை. தொடர்ந்து சிந்திப்போம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏