மகேந்திரவர்மன் - மயிலை சீனி வேங்கடசாமி
மயிலை சீனி. வேங்கடசாமி தமிழறிஞரும், எழுத்தாளருமாவார். தமிழக வரலாறு பற்றி பல அரிய ஆய்வு நூல்களைஎழுதியவர். அவர் எழுதிய மகேந்திரவர்மன் என்ற நூலில் இருந்து சில தேன்துளிகள்
👉 மகேந்திரனின் தந்தையாரான “சிம்மவிஷ்ணு” கிபி 550 - 590 வரை ஆட்சி புரிந்தார். அப்பொழுது பல்லவ இராசியமானது வடக்கே கிருஷ்ணா நதி முதல் தெற்கே புதுக்கேட்டை வரை பரவியிருந்தது. அஃதாவது ஆந்திர நாடு, தொண்டைமண்டலம், சோழமண்டலம் ஆகிய மூன்று நாடுகளை கொண்டது.
👉 மகேந்திரவர்மன் 590-630 வரை ஆட்சி செய்தான். இவனது காலத்தில் பல்லவ தேசத்தின் வடக்கு எல்லைகுறைந்துவிட்டது. “வாதாபி”யை தலைதகரமாக கொண்டு ஆட்சி புரிந்த சாளுக்கிய மன்னன் “இரண்டாம் புலிகேசி” ஆந்திர நாட்டை கைப்பற்றினான். காஞ்சிபுரத்தில் வடக்கே 15 மைல் தொலைவில் புள்ளலூர் என்ற ஊரில் நடந்தபோரில் மகேந்திரவர்மன் காஞ்சியை தற்காத்துக்கொண்டான். புலிகேசி அவனது தம்பியான “விஷ்ணுவர்தனை” ஆந்திரநாட்டுக்கு தளபதியாக்கி சென்றான். பின்நாளில் விஷ்ணுவர்தன் சுயாட்சி அறிவித்து “கீழை சாளுக்கிய” வம்சத்தை உருவாக்கினான். இந்த அரசு கிபி 1130 வரை 500 ஆண்டுகளுக்கு இருந்தது. பின்பு இது சோழப்பேரரசுடன் இணைந்தது. வேங்கி அரசை கீழைச் சாளுக்கியர்களே சோழர்களின் பாதுகாப்புடன் கிபி 1189 வரைஆண்டனர்.
👉 இதனால், மகேந்திரவர்மன் ஆட்சி எல்லையானது வடபெண்ணை ஆற்றங்கரையில் இருந்து புதுக்கோட்டை வரைஇருந்தது.
👉 பல்லவன் காஞ்சியை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்தான். கடல்மல்லை என்ற ஊர் துரைமுகமாக இருந்தது. கடல்மல்லை/மல்லை தான் இப்பொழுது மகாபலிபுரம் என்று அழைக்கப்படுகிறது.
தொண்டைமான் இளந்திரையன் காலத்தில் கடல்மல்லை தொண்டைநாட்டுப் துரைமுகப்பட்டினமாக இருந்தது.
👉 மகேந்திரவர்மன் ஆட்சி செய்த காலத்தில் ஹர்ஷவர்த்தனன் மற்றும் இரண்டாம் புலிகேசி வடஇந்தியா மற்றும் தென்இந்நியாவை ஆட்சி செய்தனர்.
ஹர்ஷவர்த்தனன் (590–646) வடஇந்தியாவை 40 வருடங்கள் வரை ஆண்ட ஒரு வடஇந்தியப் பேரரசர். ஹர்சரின்தலைநகர் கன்னோசி. இரண்டாம் புலிகேசி (கிபி 610 - 642) சாளுக்கிய மரபின் மிகவும் புகழ் பெற்ற மன்னனாவான்.
ஹர்ஷவர்த்தனன் மற்றும் இரண்டாம் புலிகேசிக்கும் கிபி 620யில் நர்மதா நதிக்கரையில் போர் மூண்டது. இதில் புலிகேசி ஹர்ஷவர்த்தனின் ஆட்சி தெற்கில் பரவாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.
👉 மகேந்திரவர்மன் ஆட்சி செய்த காலத்தில் பாண்டியநாட்டை அரசாண்ட மன்னன் சேந்தன். இந்த சேந்தன், பாண்டியன் மாறவர்மனுடய மகன், கடுங்கோனுடைய பேரன்.
👉 மகேந்திரவர்மன் ஆட்சி செய்த காலத்தில் சமயநிலை: மகேந்திரவர்மனே சமண சமயத்தை சார்ந்தவனாக இருந்தான். திருநாவுக்கரசர் இவனை சைவசமயத்தில் சேர்த்தார். திருநாவுக்கரசரே சமண சமயத்தில்தான் இருந்தார். ஆவர் சமணசமயத் தலைவராக இருந்தபோது தருமசேனர் என்று அழைக்கப்பட்டார். அவருடைய சூலைநோய் குணமாவதற்காக சைவசமயம் மாறினார். சமணம், பௌத்தம் ஆகிய சமயங்கள் தமிழகத்தில் சிறப்பாக இருந்தன. பக்தி இயக்கத்தால் பல்லவனும், பாண்டியனும் சையத்திற்கு மாறினர்.
👉 முகம்மது நபி:- கிபி 569இல் பிறந்தார். தமது 40வது வயதில் கடவுளின் திருவருள் கிடைக்கப்பெற்றார். அவர் இஸ்லாம் மத்த்தின் மதகுருவாகவும் அரசியல் தலைவராகவும் விளங்கினார். இவரது காலத்தில் இஸ்லாம் அரபு நாடு முழுவதும் பரவியது. இவர் கிபி 632 ஆம் ஆண்டில் காலமானார்.
👉சங்கக் காலத்தில் செழித்திருந்த ஓவியக்கலை இடைக்காலத்தில் சிதைந்து மறைந்துபோகத் தொடங்கியது. மறைந்து கொண்டிருந்த ஓவியக்கலைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டியவர்கள் பல்லவர்கள்
👉7ஆம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட முதலாம் மகேந்திரவர்மப் பல்லவன் சிறந்த ஓவியன். கல்வெட்டுகள் இவனைச் “சித்திரகாரப்புலி” எனப்புகழ்கின்றன “தட்சிணசித்திரம்” என்னும் ஓவிய நூலுக்கு இம்மன்னன் உரை எழுதியுள்ளான்.
👉 மகேந்திரவர்மனின் பட்டப்பெயர்கள்:- குணபரன், மத்தவிலாசன், சித்திரகார புலி, சங்கீரண கதி, சத்ருமல்லன், அவனிபாஜன் முதலியன.
👉 “பல்லவபுரம்” என்னும் பெயருள்ள மூன்று இடங்கள் பல்லவ அரசகுடும்பத்தினர் வாழ்ந்துவந்தனர். 1. பல்லாவரம்(சென்னை) 2. பல்லாவரம் (காஞ்சி) 3. பல்லாபுரம் (திருச்சி)
👉 மகேந்திரவர்மன் ஆட்சி செய்த காலத்தில் கட்டிய குடைவரை கோயில்கள்:-
- திருச்சிராப்பள்ளி குடைவரை கோயில்
- பல்லாவரத்துக் குடைவரை கோயில்
- வல்லம் குடைவரை கோயில்
- மண்டகப்பட்டு
- தளவானூர்
- மகேந்திரவாடி
- மாமண்டூர்
- மேலைச்சேரி
- சித்தன்னவாசல்
- சீயமங்கலம்
- குரங்கணின் முட்டம்
- சிங்கவரம்
- திருக்கழுக்குன்றம்
- திருக்கோகர்ணம்
- மகாபலிபுரம்
👉மகேந்திரவர்மன் இயற்றிய “மத்தவிலாச நாடகம்” இந்த நூலின் ஆசிரியர் தமிழில் வழங்கியிருக்கிறார். வரலாற்றுஆர்வலர்கள் அதை கண்டிப்பாக வாசிக்கவேண்டும்.
👉ஆரியமும் தமிழும்:- வைதிகப் பிராமணராகிய ஆரியர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னே தமிழ்நாட்டில்வந்திருந்தனர். ஆனால் திராவிடப் பண்புடன் கலக்காமல் நெடுங்காலம் தனித்து இருந்து வந்தனர். ஆதியில் வைதீகப்பிராமணர் இலிங்க வழிபாம்டையும், திருமால் வணக்கத்தையும் மேற்கொள்ளாமல் இருந்தனர். சமண, பௌத்தசமயத்தின் தாக்கத்தால், வைதிக பிராமணர்கள் திராவிடக் கடவுள்களை ஏற்றுக்கொண்டனர். திருநாவுக்கரசர் இந்ததிராவிட-ஆரிய சமயப் கலப்பை தமது தேவாரத்தில் குறிப்பிடுகிறார்.
“ஆரி யந்தமி ழோடிசை யானவன்
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்”
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏