பண்டைக்கால நிர்வாகம்

தமிழ்நாடு பண்டைக் காலத்தில் சேரசோழபாண்டியபல்லவ மன்னர்களால் ஆளப்பெற்றது. ஆட்சி மற்றும் பொருளாதார வளமைக்காக நிலங்கள் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டன

பண்டைய நிர்வாகம்:-

பல்லவர் காலத்தில் அவர்களது இராசியத்தை 

  1. கோட்டம்
  2. நாடு
  3. ஊர்

என பிரிக்கப்பட்டிருந்தது.


பல்லவர் கோட்டம்:-


தொண்டை நாடு பல்லவர்க்கு முன்னரே 24 கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு இருந்ததுஅவையாவன:

  1. புழல் கோட்டம்
  2. ஈக்காட்டுக் கோட்டம்
  3. மணவிற் கோட்டம்
  4. செங்காட்டுக் கோட்டம்
  5. பையூர்க் கோட்டம்
  6. எயில் கோட்டம்
  7. தாமல் கோட்டம்
  8. ஊற்றுக்காட்டுக் கோட்டம்
  9. களத்துர்க் கோட்டம்
  10. செம்பூர்க் கோட்டம்
  11. ஆம்பூர்க் கோட்டம்
  12. வெண்குன்றக் கோட்டம்
  13. பலகுன்றக் கோட்டம்
  14. இலங்காட்டுக் கோட்டம்
  15. கலியூர்க் கோட்டம்
  16. செங்கரைக் கோட்டம்
  17. படுவூர்க் கோட்டம்
  18. கடிகூர்க் கோட்டம்
  19. செந்திருக்கைக் கோட்டம்
  20. குன்றவட்டான கோட்டம்
  21. வேங்கடக்கோட்டம்
  22. வேலூர்க்கோட்டம்
  23. சேத்துர்க் கோட்டம்
  24. புலியூர்க்கோட்டம்


சோழர்கள் காலத்தில் அவர்களது இராசியத்தை 

  1. மண்டலம் மற்றும் பாடி
  2. வளநாடு
  3. நாடு
  4. ஊர்

என பிரிக்கப்பட்டிருந்தது.


சோழ மண்டலம்:-




  • ஊர் என்பது சிறிய பிரிவாக (கிராமம்ஆகும்.
  • பல ஊர்கள் கொண்டது நாடு.
  • நாடுகள் பல கொண்டதாக வளநாடு இருந்தது.
  • ஒவ்வொரு மண்டலமும் பத்து வளநாடுகளாக பிரிக்கப்பட்டதுமண்டலமானது சோழர்களின் பிராந்தியப்பிரிவுகளில் மிகப்பெரியது

சோழ நாடு தன் அதிகாரத்தின் உச்சத்திலிருந்தபோதுஅது ஒன்பது மண்டலங்களாக பிரிக்கப்பட்டிருந்ததுஇதில்இலங்கை போன்ற வெற்றிகொள்ளப்பட்ட பகுதிகளும் அடங்கும்

  1. சோழமண்டலம்
  2. தொண்டைமண்டலம் / ஜயங்கொண்ட சோழமண்டலம்
  3. கொங்குமண்டலம்
  4. பாண்டியமண்டலம் அல்லது இராஜராஜபாண்டிமண்டலம்
  5. கங்கபாடி
  6. தடிகைபாடி
  7. நுளம்பபாடி
  8. மரையபாடி
  9. மும்முடிசோழமண்டலம் / ஈழமண்டலம்


இலச்சினை

  • பாண்டியர்க்கு -> மீனும்
  • சோழர்க்குப் -> புலியும்
  • சேரர்க்கு -> வில்லும்
  • பல்லவர்க்கு -> நந்தி
  • கங்கர்க்கு -> நாகமும்
  • சாளுக்கியர்க்கு -> பன்றியும்

                 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏