சாங்கியம்
இந்தியத் தத்துவங்களில் சிறப்பானதும் முன்னோடியான தத்துவம் ஆகும்.
சாங்கிய தத்துவத்தை நிறுவிய கபிலர்.
கபிலர் என்பது தமிழ் பெயர். அவர் தமிழில் எழுதிய நூல் எண்ணியம். அவர் காலம் கிமு ஐந்தாம் நூற்றாண்டுக்கும் முந்தியது. பெளத்தம், சமணம் ஆகிய பெரிய மதங்கள் உருவாவதற்கு வெகு காலத்துக்கு முன்பே சாங்கியம் வளர்ந்து வலுப்பெற்றிருந்தது என்று கூற ஆதாரமுள்ளது.
அஸ்வகோஷனின் புத்த சரிதம் என்ற நூலில் புத்தருக்கு காலத்தால் முந்திய பல சாங்கிய அறிஞர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
சாங்காயம் என்பது பழங்குடி மரபில் இருந்து முளைத்தது என்கிறார் ரிச்சர்ட் கார்பே ( Richard Garbe : Ancient Indian Philosophy )
சாங்கிய தரிசனத்தின் ஆதி குரு கபிலர். ஆனால் கபிலர் என்ற பெயர் முழுமையானதல்ல. அது அடையாளப் பெயராக பரவலாகப் புழக்கத்திலிருந்திருக்கலாம். சங்ககால மரபிலேயே தொல்கபிலர், கபிலர் என்று இரு கவிஞர்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. கபிலர் குறித்து சில புராண நம்பிக்கைகள் தவிர தெளிவான சரித்திரம் ஏதும் இப்போது கிடைப்பது இல்லை. ரிச்சர்ட் கார்பே என்ற வரலாற்றாசிரியர் கபிலனின் நினைவாகவே கபில வாஸ்து என்ற பெயர் அந்நகருக்கு சூட்டப்பட்டது என்கிறார். புத்த மதத்துக்கு சாங்கிய மதத்திடம் உள்ள நெருங்கிய உறவுக்கும் இதுவிளக்கம் தருகிறது. ஆனால் கபிலன் வசித்த இடம் என்ற பொருள் வரும் கபில வாஸ்துவுக்கும் கபிலனுடன் உறவுண்டு என்று காட்டும் வேறு ஆதாரம் ஏதும் இல்லை.
சாங்கிய மற்றும் வைதிக மதம்:-
கபிலர் பிராமணப் புரோகிதர்களால் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார் என்ற ஐதீகக் கதையை சில பிற்கால நூல்களில் காண்கிறோம். அதற்கு உரிய ஆதாரம் ஏதும் தரப்படவில்லை. ஆனால் அடிப்படையில் சாங்கிய மதத்துக்கு வைதிக புரோகித மதத்துடன் முழுமையான எதிர்ப்பு காணப்படுகிறது. வெகுகாலம் சாங்கிய மதம் புரோகித மதத்துக்குஎதிரான பெரும் சக்தியாக விளங்கியிருக்கக்கூடும். சாங்கியத்தை சார்வாகமதத்தின் ஒரு தர்க்கபூர்வமான வளர்ச்சிநிலையாகக் காண்பதிலும் தவறில்லை.
சாங்கிய தத்துவம்:-
பிரகிருதி (இயற்கை), புருடன் (அறிவுள்ள பொருள்) ஆகிய இரு பொருட்கள் பற்றி மட்டுமே பேசுகின்ற சடவாத தரிசனமாகும். பரம்பொருள் (இறைவன்) குறித்து எதுவும் கூறப்படவில்லை
முக்குணங்கள், பஞ்ச பூதங்கள், மனம், மற்றும் பிரபஞ்சத்தின் படைப்பு, இருப்பு மற்றும் அழிவு குறித்து விரிவாகஎடுத்துரைக்கிறது.
புருடன் :- அறிவுள்ள பொருள் என்றும்
பிரகிருதி:- அறிவற்ற சடப்பொருள் என்றும் கூறுகின்றது. உலகமானது முக்குணங்களின் சேர்க்கையினால் உருவானது என்பது இதன் கருத்து.
மூன்று குணங்கள்:-
- சாத்விக குணம்,
- இராஜச குணம்,
- தாமச குணம் ஆகியவை உள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றன
சாங்கியத் தரிசனம் குறித்த மிகப் புராதன நூல்கள் எவையும் இப்போது கிடைப்பதில்லை. கபிலனில் மூலநூல் என்று கூறப்பட்ட சாங்கிய பிரவசன சூத்ரம் உண்மையில் மிகவும் பின்னால் – 14 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நமக்கு கிடைக்கும் மிகப்பழைய நூல் ஈஸ்வர கிரிஷ்ண சூரி எழுதிய சாங்கிய காரிகை. அது கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.
உலகின் தொற்றத்திற்கு எது காரணம்?! கருத்தா (கடவுள்) அல்லது பொருளா?! கருத்து முதல்வாதமா அல்லது பொருள் முதல் வாதமா?!
கருத்து முதல்வாதம் என்று ஆத்திகர்களும்;
பொருள் முதல்வீதம் என்று நாத்திகர்களும் மூவாயிரம் ஆண்டுகள் முன்பிருந்தே இந்த விவாதம் இருந்தது. கருத்து மற்றும் பொருள் என இரண்டையும் விளக்கும் தத்துவமாக சாங்கியம் இருந்தது.
அவ்வை என்ற பெயரை போன்றே கபிலர் என்னும் பெயரில் பல அறிஞர்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.
- சாங்கிய தத்துவம் இயற்றிய கபிலர் - கிமு 5ஆம் நூற்றாண்டு
- குறிஞ்சி பாடிய கபிலர் - கிமு 3ஆம் நூற்றாண்டு
- இன்னா நாற்பது இயற்றிய கபிலர் - கிபி 2ஆம் நூற்றாண்டு
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment