பாம்பீ யட்சி (Pompeii’s Yakshi)

 





பாம்பீ யட்சினி அல்லது யட்சி என்பது ஒரு தந்த சிலை ஆகும்இது பாம்பீயின் இடிபாடுகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதுஇது மவுண்ட் வெசுவியஸ் (Mount Vesuvius) கிபி 79 வெடித்ததில் சற்று சிதலம் அடைந்துள்ளதுகிபி முதலாம் நூற்றாண்டில் முன்னர் இந்தியாவிற்கும் ரோமிற்கும் இடையிலான வணிக வர்த்தகத்திற்கான சான்றாக யட்சி உள்ளது.


இந்த சிலை அழகு மற்றும் கருவுறுதல் ஆகியவற்றின் இந்திய தெய்வத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கருதப்படுகிறதுஇந்த சிற்பம் முதலில் கண்ணாடியின் கைப்பிடிக்காக உருவாக்கியிருக்கலாம்நேபிள்ஸ் தேசியதொல்பொருள் அருங்காட்சியகத்தால் இந்தச் சிலை அந்த நூற்றாண்டின் முதல் பாதியில் இந்தியாவில் உருவாக்கப்பட்டது என தேதியிட்டுள்ளது.




சிலையின் அடிப்பகுதியில் ஷி என்ற கரோஸ்தி எழுத்து பொறிக்கப்பட்டிருந்தது. கரோஷ்தியில் எழுதியிருப்பதால் வடமேற்கிலிருந்து கைவினைஞர்கள்குறிப்பாக காந்தாராவின் இந்தோ கிரேக்கப் பகுதியிலிருந்து இந்த சிலை உருவாக்கப்பட்டு பாம்பீக்கு வந்திருக்கலாம்ஏன் என்றால் பிராமி எழுத்துமுறைக்கு மாறாக கரோஷ்தியில் இருப்பதால்சிலர் மகாராஷ்ராவில் இருந்து வந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்



No comments:

Post a Comment