தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும் (பொ.ஆ 800-1500) - நொபொரு கராஷிமா (Noboru Karashima) - எ. சுப்பராயலு (Subbarayalu)

தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும் (பொ.ஆ 800-1500)
- நொபொரு கராஷிமா (Noboru Karashima)
- எ. சுப்பராயலு (Subbarayalu)



இவர்களிருவரும் தமிழகத்தில் பொ.ஆ. 800 -1500 காலத்தின் கல்வெட்டுக்களில் ‘ஓம்படைக்கிளவியின்’ வரும் குறிப்புகளை வைத்தும், வரலாற்று செய்திகளை ஆராய்ந்தும், தமிழகத்தில் சாதிய உருவாக்கம், படிநிலை, ஏற்றத்தாழ்வு, தரவரிசைப்படுத்தப்பட்ட சமூக மாற்றங்களை ஆய்வு செய்து கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள்.


✅“தமிழ்நாட்டில் தீண்டாதார்

         👉 10 ஆம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளில் சாதிமுறையில் கீழ்நிலையில் வைக்கப்பட்டிருந்த மக்கள் வாழ்ந்த இடங்களைப் பற்றிய குறிப்புகள், சாதிப் படிநிலை பற்றிய குறிப்புகள் காணப்படுவது

        👉செங்கல்பட்டு மாவட்டம் உள்ள திருக்கழுக்குன்றம் கல்வெட்டு (இக. 1933:171) மூன்று வேலி நிலமும் அடிமைகளும் விற்கப்பட்டதைக் குறிப்பிடுகிறது.

       👉சோழர் காலத்தின்போது தீண்டாதார் என்று கருதப்பட்ட பல சமூகங்கள் இருந்த போதிலும் அவர்கள் யார் என அடையாளம் காண இயலவில்லை.

       👉உழவு, புல் வெட்டுதல், தோல் தொழில், நெசவு உள்ளிட்ட கைவினைத் தொழில் மேற்கொண்டிருந்த பறையர்கள் சமூகத் தரநிலையில் அடிமட்டத்திற்கு நெருங்கிய நிலையில் இருந்தனர்.

       👉பறையர்களும் புலையர்களும் அடிமைகள் ஆக்கப்பட்டு, விற்கவும் வாங்கவும் பட்டனர். வெள்ளாளர்களும் கூட அடிமைகள் ஆக்கப்பட்டு, விற்கவும் வாங்கவும் பட்டனர். (பக்.10&11)

       👉 சைவ பக்தி இலக்கியத்தில் நந்தனாரைப் போன்று கோயிலுக்கு நுழைய அனுமதிக்கப்படாத வைணவ பக்தர் ‘திருப்பாணாழ்வார்’ பற்றிய இந்நூல் மேற்கோள் காட்டுகிறது.


✅ “சோழர் காலத்தில் சமூக மாற்றத்தின் சில தன்மைகள்

       👉 அக்காலத்தில் இக்கல்வெட்டுகள் பொருளாதார வசதி பெற்றவர்களால் உருவாக்கப்பட்டவை. இதன் மூலம் அக்காலச் சமுதாயத்தின் முழு வடிவம் கிடைப்பது அரிது என்றாலும் ‘வலங்கை’ மற்றும் ‘இடங்கை’ என்ற இருபிரிவு வகைப்பாடாக சாதிகள் பிரிக்கப்பட்டது என தெரிகிறது.

       👉 பெரம்பலூர் மாவட்டம் ‘வாலிகண்டபுரம்’ மூன்றாம் குலோத்துங்கனின் 11 ஆம் ஆட்சி ஆண்டில் 11 வரிக் கல்வெட்டில் வரும் செய்தியானது


பெரம்பலூர் மாவட்டம் ‘வாலிகண்டபுரம்’ மூன்றாம் குலோத்துங்கனின் 11 ஆம் ஆட்சி ஆண்டில் 11 வரிக் கல்வெட்டு

1.    ஸ்வஸ்த்திசிரி  [!] திருபுவனச் சக்கரவத்திகள் இராசராசதேவற்கு

2.    யாண்டு 11 வது வடகரை வன்நாட்டு வாலிகண்டபுரத்து உடையார்

3.    திருவாலீஸிரமுடைய நாயனார் திருக்கோயிலில் இடங்கை தொண்ணூற்றெட்டுக்

4.   கலனையும் நிறவறநிறைந்து குறவறக்கூடி கல்வெட்டியபடியாவது

5.   பலமண்டலங்களில் பிராமணரும் ஆரியரும் சித்திர மேழிப்

6.    பெரியநாடான யாதவர் குலத்தலைவரான நத்தமக்களும் சதிரமுடித் தலைவரான

7.   மலையமான்களும்  காயங்குடி கண்ணுடை அந்தணரும் சம்புவர்குலபதிப்

8.   பன்னாட்டாரும் பதினென் விஷயத்து வாணிய நகரங்களும் பொற்கோயிற் கைக்கோளரும்

9.   யிடங்கை தொண்ணூற்றெட்டுக் கலனைகளுக்கும் ஒருவற்கு வன்த நன்மைத் தீமை

10. அனைவற்கும் ஆவதாகவும் யிப்படி விலங்கிலோமாகில்  மாறுடாதிக்குங்

11. கீழ்சாதிக்குங் தாழ்வு செய்தோமாக இத்தனை யிப்படி ஒரு காலாலும் யிருகாலாலும் முக்காலாவதும்.

 “நாட்டுமக்கள், மலையமான்கள், மற்றும் 98 இடங்கைச் சாதிகள் செய்துகொண்ட ஒற்றுமை உடன்படிக்கையைக் குறிப்பிடும் வாலிகண்டபுரம் கல்வெட்டு, உடன்பட்டோரின் நல்லது கெட்டதுகளைப் பகிர்ந்துகொள்வோம் என்றும், இந்த உடன்படிக்கைக்கு எதிராகத் திரும்பும் எவராயினும் கீழ்ச்சாதியானும் கீழ்ச்சாதி ஆவார் என்று உடன்படிக்கை செய்துகொண்டதை குறிப்பிடுகிறது. (AR 1943/44:268, AD 1233, Tp). 


       👉 12ஆம் நூற்றாண்டு மேற்கொள் காட்டப்பட்ட ‘திருக்கச்சூர் கல்வெட்டு’ குறிப்பிடும் உயர் சாதி வகுப்பினர்கள்வரலாற்று அறிஞர் திருநொபோரு கராஷிமா அவர்கள்காஞ்சிபுரம் மாவட்டம்செங்கல்பட்டு அருகில் உள்ளதிருக்கச்சூர் கல்வெட்டை பற்றி கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்கள் :-


திருக்கச்சூர் பாண்டியர் காலக் கல்வெட்டு பதிவு செய்திருக்கும் செய்தியானதுசில பிராமணர்களும் வெள்ளாளர்களும் தங்களுடைய உயர்குடிகளுக்கு உரியதான நற்பண்புகளில் தங்களை ஈடுபடுத்தாமல்கீழ்ஜாதிகளின் செயல்களைப் போல மிக மோசமான செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள்இந்த செய்தியானது தெரிவிக்கு கருத்து என்பதுஇரண்டு உயர்குடி சமூகத்தவர்களான பிராமணர்கள் மற்றும் வெள்ளாளர்களிடம் சமூகஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் நிலவியிருக்கிறது என்பதாகும்".


        👉 தென்னிந்தியாவில் க்ஷத்ரியர் என்ற ஒரு தனி சமூதாயம் இருந்திருக்கவில்லை என்றாலும்பண்டைய மற்றும் மத்தியகாலக் கட்டத்தில் வெள்ளாளர் என்ற வலிமையான சமூதாயம் க்ஷத்ரியர்களின் பங்கினை வகித்திருக்கிறார்கள் என்று நம்மால் கருதமுடிகிறதுஇதற்கு மிக சிறந்த உதாரணமாக பிராமணர் / வெள்ளாளர் ஒற்றுமையை திருக்கச்சூர் கல்வெட்டு குறிப்பிடுவதாக அறிஞர் திருநொபோரு கராஷிமா அவர்கள் தெரிவிக்கிறார்கள். அறிஞர் திருநொபோருகராஷிமா அவர்கள்தெளிவாக ஒன்றை குறிப்பிடுகிறார்கள்பிராமணர்களுக்கு அடுத்த நிலையில் வெள்ளாளர்கள் என்ற சமூதாயத்தினார்கள் இருந்திருக்கிறார்கள் என்றும் தென்னிந்தியாவில் க்ஷத்ரியர் என்ற ஒரு சமூதாயம் இருந்திருக்கவில்லை என்றும் வெள்ளாள சமூகத்தவர்களே க்ஷத்ரியர்கள் செய்யவேண்டிய பணிகளை செய்திருக்கிறார்கள் என்றும் குறிப்பிடுகிறார்கள்


        👉 மேலும்அதுவரை அரசுகளின் தாக்கத்துக்கு ஆளாகாமல் ஒதுங்கியிருந்த பல இனத்தவர் சோழ அரசால் ஈர்க்கப்பட்டு அரசியல்மயப்படுத்தப்பட்டனர்கி.பி.10-ம் நூற்றாண்டு பல படை பிரிவுகள் உருவாகி இருந்ததுஉதாரணமாக வேளக்காரப்படைகைக்கோளப்படைவில்லிகள்பள்ளிகள் முதலியனபோரில் வெற்றியடைந்த சோழ அரசு இந்தபடை அமைப்புக்கு நிலங்களை வழங்கியது


      👉 13ஆம் நூற்றாண்டில் அரசு நிலையின்மை நிலவியபோது அவை சாதியசமூக அமைப்பாக உருமாறி தன்னை நிலைநிறுத்திக்கொண்டதுஉதாரணமாககோவை வெள்ளலூரில் உள்ள காசிஅப்பச்சி கோயில் சோழர் காலக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் பல்வகைப் படையினரில் கைக்கோளர்படையினரும் ஒருவர். ‘பொற்கோயில்’ என்ற சிறப்பு அடையாளத்தை அல்லது பட்டத்தைச் சிலருக்கு அரசர் வழங்கியிருக்க வேண்டும்கொங்குச் சோழர் ஆட்சியில்கொங்குப் பகுதியில் கி.பி. 12-14-ம் நூற்றாண்டுகளில் கைக்கோளப் படையினர் இருந்துள்ளனர்பின்னர்இது சாதிய சமூகமாக உருவெடுத்ததுஇப்படைப்பிரிவுகள் சாதிய சமூகமாக மாறிய பின்னர் சாதிய படிநிலையில் பொருத்தப்பட்டது


✅”ஓம்படைக்கிளவிகளின் எழுகையும் சாதி உருவாக்கமும்

       👉 வைதிகச் சடங்குகள் செய்தவர்கள், கோயில் பூசைகளோடு நெருங்கிய தொடர்புடையவர்கள், போரில் ஈடுபட்டவர்கள் பிற்காலத்தில் நிலவுடையாளர்களாக மாறினர். 

       👉 திருவண்ணாமலை மாவட்டம் 1258ஆம் ஆண்டில் செங்கம் கல்வெட்டில் - 11 வரிக் கல்வெட்டில் 4ஆவது வரியில்  4) ணுவாரும்  நியாயத்தாரும் பன்னிரண்டு பணிமக்களு முள்ளிட்ட பெரும் வேடரும் பாணரும் பறையரும்பறைமுதலிகளும் செக்கிலியரும்      இறுளரு முள்ளிட்ட அனைத்துச்சாதிகளு[ம்அந்தணன் தலையாக அரிப்பான்கடையாக உள்ளுப்பட்ட அனை[த்}துச்சாதி[மா]ற்க்கு தெ _ _ _ _ ல்லாரும் __ _ _ _ _ []ம் பண்ணினபடியாவதுஎங்கனாயனாரமட்டன் கரிகாலச்சோழ ஆடையூர் நாடாழ்வார் திருவிராச்சியம் பண்ணி எழுந்தருளி[]ருக்கஇவர்ஏவி அருளினபடியே இவர்கள் திருத்தம்பி

அந்தணன் தலையாக அரிப்பான் கடையாக…”. இக்கல்வெட்டில் சாதி குறிப்பிடப்படுவது சாதிமுறை 13 ஆம்நூற்றாண்டிலேயே வலுப்பெற்றுவிட்டதைக் காட்டுகின்றதுமொத்தத்தில் கல்வெட்டுச் செய்தி அரிய செய்திகளைநமக்கு வழங்குகிறது..

        👉 முதலாம் இராஜராஜன் காலத்தில் இருந்து சோழப் பேரரசர்கள் செய்த பல போர்களின் காரணமாக மக்கள் இடம் பெயர்ந்தது, சோழர் படையில் முக்கிய இடத்தை வகித்த பல மக்கள் பிரிவினர் 13– 14 நூற்றாண்டுகளுக்கு பின்னர், சாதிய சமூகமாக உருவெடுத்தது. இப்படைப்பிரிவுகள் சாதிய சமூகமாக மாறிய பின்னர் சாதிய படிநிலையில் பொருத்தப்பட்டது. 


✅“பதினைந்தாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் ஓர் உழவர் கிளர்ச்சி”

        👉1429 ஆம் ஆண்டு நிகழ்ந்த உழவர் கிளர்ச்சி என பலராலும் அறியப்படாத பல அரிய தகவல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. 

        👉ஆடுதுறை, கீழப்பழுவூர், விருத்தாசலம், பெண்ணாடம், எலவானாசூர் கல்வெட்டுகள் உழவர் கிளர்ச்சியை பற்றி கூறுகிறது. 

       👉நிலம் குத்தகை எடுப்பதுபோல, வரி வசூல் செய்வதையும் குத்தகை எடுத்து கடைநிலை உழவு தொழிலாளர்களையும், கைவினை தொழில் செய்பவரை நசுக்கினர், அதனால், ஏற்பட்ட கிளர்ச்சி.

       👉1429ஆம் கிளர்ச்சி இடைக்கால இந்தியாவில் நடந்த ஒருசில நிலமானியக் கிளர்ச்சிகளுள் முக்கியமானது. 


தமிழக மக்களின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் பயன்படும் சிறந்த நூல்.


                   🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment